ஐக்கிய நாடுகள் சபையும் மொழியின்றித்தவிக்கும் மூன்றாம் உலக நாடுகளும்..


இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவடைந்த பின் அதன் பாதிப்புகளால் சிதறிக்கிடந்த நாடுகளை ஒன்றினைக்கக்கூடிய தேவையினையும் தமது ஆதிக்கமனப்பான்மையினை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலைகளையும் புரிந்துகொண்ட அதன் வெற்றியாளர்களான அமெரிக்கா, றஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போண்ற நாடுகள் ஒன்று சேர்ந்து பொதுவானதொரு அமைப்பினை நிறுவ சம்மதிக்கின்றன அந்தவகையில்.

மீண்டுமொரு உலக மகாயுத்தத்தை தவிர்க்கும் பொருட்டும் உலக நாடுகளுக்கிடையே ஐக்கியத்தையும், ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் உன்னத நோக்கோடு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபையினை பொருத்தவரை அதன் கூட்டத்தொடர்களில் அங்கத்துவ நாடுகள் பயண்படுத்தும் வகையில் ஆறுமொழிகளுக்கே உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழிகளே அவை இந்த ஆறு மொழிகளுக்கு மட்டுமே நிரந்தரமான மொழிபெயர்ப்பாளர்கள் காணப்படுவதோடு ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் ஆகிய மொழிகள்தான் அதிகமான நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐநாவில் ஆங்கிலத்தில் பேசும் போது, பெரும்பாலானவர்கள் அதனை நேரடியாக புரிந்துகொள்வதோடு பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழி ஆகிய மொழிகள் உடனுக்குடன் மொழிபெயர்த்து காதொலிப்பான் (headphone) மூலம் ஒலிபரப்பப்படுகின்றன.

ஐநாவின் மொழி அல்லாத மொழியில் பேச, முன் அனுமதி பெற்று மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டுமன்பதோடு அந்த மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை - அதிலிருந்து பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் உள்ளிட்ட ஐநா மொழிகளுக்கு மாற்றுவதனால் பல்வேறு திரிவுகளுக்குட்பட்டே சென்றடைவதால் பேசும் கருத்தை முழுமையாக உணரமுடியாத சூழ்நிலைமை ஏற்படுகின்றது.

மொழியின்றித்தவிக்கும் இலங்கை, இந்தியா போண்ற நாடுகள் ஐநா அவையில் சிங்களத்திலோ, தமிழிலோ இந்தியிலோ பேசுவது பெருமைல்ல  பேசப்படும் விடயங்கள் எந்தளவுக்கு மற்றய நாட்டு தலைவர்களினால்  புரிந்துகொள்ளப்பட்டு தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற விடயத்தில்தான் அந்தந்த நாடுகளின் பெருமை தங்கியிருக்கின்றது.

Muja Ashraff
ஐக்கிய நாடுகள் சபையும் மொழியின்றித்தவிக்கும் மூன்றாம் உலக நாடுகளும்.. ஐக்கிய நாடுகள் சபையும் மொழியின்றித்தவிக்கும் மூன்றாம் உலக நாடுகளும்.. Reviewed by Madawala News on 10/03/2016 02:17:00 PM Rating: 5