Accaddemy

புதிய அரசியல் அமைப்பிலும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது...

இலங்கை அரசியல் அமைப்பில் பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்பான சரத்தில் எதுவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ...

அரசியல் அமைப்பில் தற்போது பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள  முன்னுரிமை தொடர்பான சரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. 

இதற்கு பாராளுமன்றில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் கத்தோலிக்க சபை கார்டினல் அவர்களும் ஹிந்து இஸ்லாம் மதத்தலைவர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நாம் அரசாங்கம் என்ற வகையில் நாமும் ஜனாதிபதியும் இந்த விடயத்தை விளம்பரப்படுத்துவதில்லை.புத்தசாசனத்தை நாம் செயலிலே நாம் பாதுகாப்போம் சொல்லால் அல்ல. சிலர் சொல்லால் பாதுகாக்கவும் செயலால் அழிக்கவும் கெட்டிக்காரர்கள்.நாம் எனது செயலால் புத்தசாசனத்தை முன்னோக்கி எடுத்துசெல்வோம் என குறிப்பிட்டார்.


புதிய அரசியல் அமைப்பிலும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது... புதிய அரசியல் அமைப்பிலும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது... Reviewed by Madawala News on 10/09/2016 07:04:00 PM Rating: 5