பொய்யான செய்தியை தேசிய பத்திரிகைக்கு வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு அதிகாரி..



எம்.ஏ.அஹமட்
அண்மையில் (2016.10.10)ம் திகதி தினகரன் பத்திரிகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழ விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் (தற்போதைய பதில் விளையாட்டுப் பணிப்பாளர்) ஐ.எம் கதாபி என்பவர் 'பல்கலைக்கழக விளையாட்டுவிழா: தென்கிழக்குப் பல்கலைக்கழக வீரவீராங்கனைகள் பிரகாசிப்பு' எனும் தலைப்பில் எழுதியிருந்த செய்திக்கு அப்பல்கலைக்கழக சகவிளையாட்டு அதிகாரி ஏம். எல் தாஹீர் என்பவர் பின்வருமாறு மறுப்பறிக்கையை வழங்கியுள்ளார்.

'பல்கலைக்கழகவிளையாட்டு விழா: தென்கிழக்குப் பல்கலைக்கழக வீரவீராங்கனைகள் பிரகாசிப்பு. இத்தலைப்பில் சென்ற 2016.10.10ம் திகதிய தினகரன் பத்திரிகையில் வெளியான செய்தியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 01 வெண்கலப்பதக்கத்தினையும், 06 வெள்ளிப் பதக்கத்தினையும் 29 சான்றிதழ்களையும் பெற்றதாக ஐ. எம். கதாபி என்பவர் தெரிவித்திருந்தார். என்று அச்செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் மிகவும் அப்பட்டமான பொய்யுமாகும். 

இம்முறை நடைபெற்று முடிந்த 12 வது பல்கலைக் கழகங்களுக்கிடையிலாக விளையாட்டு விழாவில் கல்நதுகொண்டவன் என்ற அடிப்படையில் இவ்விளையாட்டு தொடர்பான உண்மையை தெரியப்படுத்துவது எனது கடமை என்ற அடிப்படையில் இச்செய்தியை சகல ஊடங்களுக்கும் வெயிடுகின்றேன்.
ளுடுருபு 2016 எனும் தலைப்பில் 12 வது பல்கலைக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் கடந்த 2016.09.01ம் திகதி முதல் 2016.09.13ம் திகதி வரை குளியாப்பிட்டிய வயம்ப பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இவ்விளையாட்டுப்போட்டியில் இலங்கையில் உள்ள 14 பல்கலைக்கழகங்களின் வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெறும் 06 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது இதில் 01 வெள்ளிப்பதக்கமும் 05 வெண்கலப் பதக்கங்களுமாகும். ஆனால் கதாபி உண்மைக்குப் புறம்பாக தனக்கு விiயாட்டுத் தெரியாது என்பதனை மறைப்பதற்காக 05 வெள்ளிப்பதக்கம் என பொய்யுரைத்து பல்கலைக்கழக உபவேந்தரிடம் பாராட்டுப் பெற முயற்சித்துள்ளார். உண்மையில் உதைபந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று 01 வெண்கலப்பதக்கம் கிடைக்கப்பெற்றது. இதனைப் பயிற்றுவித்தவன் நானே கடதாபிக்கு உதைபந்தாட்டம் என்றால் என்னவென்று மூடத் தெரியாது.  

மற்றையவைகள் முறையே தாய்கொண்டோப் போட்டியில் 01 வெள்ளிப்பதக்கம் மற்றும் 01 வெண்ணகலப்பதக்கத்தினையும், கராத்தே போட்டியில் 03 வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டதுடன் மொத்தமாக 55.5 புள்ளிகள் பெற்று 13 வது இடத்தினையே தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பெற்றுக் கொண்டது.

இது இவ்வாறு இருக்க தனக்கு விளையாட்டுத் தெரியாது என்பதனையும் தனது பட்டம் போலியானது என்பதனையும் நிரூபிக்கும் வகையில் இவர் தேசிய பத்திரிகைக்கு செய்தி வழங்கியுள்ளார். இவர்மீது தென்கிழக்குப் பல்லைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். என தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு போதனாசிரியர் தாஹிர் தெரிவத்தார்.
பொய்யான செய்தியை தேசிய பத்திரிகைக்கு வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு அதிகாரி.. பொய்யான செய்தியை தேசிய பத்திரிகைக்கு வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு அதிகாரி.. Reviewed by Madawala News on 10/21/2016 07:34:00 AM Rating: 5