Free Space

இன்று காலை கட்டார் செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர்களுக்கு வந்த சோதனை ...


கட்டார் நோக்கி பயணிப்பதற்காக  வந்த 300 இற்கும் மேற்பட்ட பயணிகள் இன்று (31) காலை முதல் இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானமின்றி காத்திருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பயணிப்பதற்காக ஆயத்தமாக இருந்த கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டமையே இந்த தாமதத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் இன்று காலை 10.50 மணிக்கு கட்டார் நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் இந்த தாமத்தை சீர்செய்வதற்கு கட்டார் விமான சேவை நிறுவனத்தினால், பயணிகளுக்கு தங்குமிட வசதிகளோ, வேறு பயண ஏற்பாடுகளோ செய்து கொடுக்கப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த பொடுபோக்கான நடவடிக்கையினால், விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கும், இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இன்று காலை கட்டார் செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர்களுக்கு வந்த சோதனை ... இன்று காலை கட்டார்  செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர்களுக்கு வந்த சோதனை ... Reviewed by Madawala News on 10/31/2016 09:43:00 PM Rating: 5