Oceas

இனவாதிகளுக்கு சுதந்திர கட்சியில் இனி ஒருபோதும் இடமில்லை ..

 

(ரொபட் அன்­டனி)
2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தாம் ஏன் தோல்வி அடைந்தோம் என்­ப­தற்­கான கார­ணத்தை தெரிந்துகொண்டால் தற்­போது நாக்கை மறைத்து பேசவேண்­டிய அவ­சியம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு ஏற்­பட்­டி­ருக்­காது என்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக்கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

சுதந்­திரக் கட்­சியை பிள­வ­டைய விட­மாட்டேன் என்று கூறும் மஹிந்த ராஜ­பக்ஷ  மறு­புறம் சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்க்கும் இன­வாத சக்­தி­க­ளுடன் செயற்­ப­டு­வது ஏன் என்றும் டிலான் பெரேரா கேள்வி எழுப்­பினார்.  

அர­சாங்­கத்தில் இணைந்து கொண்­டுள்ள சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.க்கள் மக்­களின் கருத்து என்­ன­வென்­பதை கண்­ட­றிய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா இது தொட்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது நாக்கை மறைத்துப் பேசிக் கொண்­டி­ருப்­ப­தா­கவே நாங்கள் உணர்­கிறோம். ஒரு இடத்தில் விக்­கி­னேஸ்­வ­ரனை விமர்­சிக்கும் மஹிந்த ராஜ­பக்ஷ மற்­றொரு இடத்தில் விக்­கி­னேஸ்­வரன் இன­வாதி அல்ல எனக் குறிப்­பி­டு­கிறார்.

அதே­போன்று சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்டேன் எனக்­கூறும் மஹிந்த ராஜ­பக்ஷ மறு­புறம் சுதந்­திரக் கட்­சியை பிரிப்­ப­தற்கு முயற்­சிக்கும் விமல் ­வீ­ர­வன்ச உத­ய­ கம்­பன்­பில போன்­ற­வர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­கிறார்.

ஏன் இவ்­வாறு முரண்­பா­டான கருத்­துக்­களை மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­விக்­கின்றார் என்று தெரி­ய­வில்லை. அதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு மஹிந்த ராஜ­ப­க்ஷவே 2006 ஆம் ஆண்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­திட்­ட­வ­ராவார். ஆனால் இன்று சுதந்­திரக் கட்சி ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள போது கடு­மை­யாக விமர்­சிக்­கின்றார்.

அதா­வது மஹிந்த ராஜ­பக்ஷ நாக்கை மறைத்து பேசும் அள­விற்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார். அவ­ருக்கு ஒரு விட­யத்தை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறோம். 

அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் தாம் ஏன் தோல்வி அடைந்தோம் என்­ப­தற்­கான கார­ணத்தை தெரிந்துகொண்டால் தற்­போது நாக்கை மறைத்து பேச வேண்­டிய அவ­சியம் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஏற்­பட்­டி­ருக்­காது என்­பதை குறிப்­பி­டு­கின்றோம்.

எவ்­வா­றெ­னினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இனி ஒரு­போதும் இன­வா­தி­க­ளுக்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கிறோம் என்றார்.
இனவாதிகளுக்கு சுதந்திர கட்சியில் இனி ஒருபோதும் இடமில்லை .. இனவாதிகளுக்கு சுதந்திர கட்சியில் இனி ஒருபோதும் இடமில்லை .. Reviewed by Madawala News on 10/11/2016 09:08:00 AM Rating: 5