Ad Space Available here

இண்டர்போல் மூலமாவது அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்குள் கொண்டுவருவோம் !!


அர்ஜுன அலோசியஸ் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வழக்குத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து, பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட விடயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோப் குழு தொடர்பிலான விவாதம் நடைபெற்றதன் பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் அர்ஜுன் மகேந்திரன் நாடு திரும்பாமல் இருக்கும் பட்சத்தில் அவரை இண்டபோல் பிடியாணை மூலமாவது நாட்டுக்கு மீள கொண்டுவருவோம் என அமைச்சர்  மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். 

அர்ஜுன் மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது தொடர்பில் அவரின் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்க்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இண்டர்போல் மூலமாவது அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்குள் கொண்டுவருவோம் !! இண்டர்போல் மூலமாவது அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்குள் கொண்டுவருவோம் !! Reviewed by Madawala News on 10/30/2016 09:01:00 PM Rating: 5