Accaddemy

தில்ருக்‌ஷியின் இடத்துக்கு அர்ஜுன் மஹேந்திரன்?



லஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா, இஞ்சி போய் மிளகாய் வந்த கதையாக மாறக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

இவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா  அவ்வாணைக்குழு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பலப்படுவதற்கு காரணமாக அமையும் எனவும் குறிப்பிட்ட அவர் 

மத்திய வங்கி முறி மோசடியை விசாரனை செய்யும் நோக்கில் அது பற்றி நன்கு அறிந்த தில்ருக்ஷியை அனுப்பிவிட்டு அவ்விடத்துக்கு அர்ஜுனன் மஹேந்திரனை நியமிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கனவே இருந்த தில்ருக்ஷியே இருந்தால் நல்லது என சொல்ல அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் நாம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தில்ருக்‌ஷியின் இடத்துக்கு அர்ஜுன் மஹேந்திரன்? தில்ருக்‌ஷியின் இடத்துக்கு அர்ஜுன் மஹேந்திரன்? Reviewed by Madawala News on 10/18/2016 07:47:00 PM Rating: 5