மருதமுனை எழுத்தாளர் மையத்தின் கருவாட்டுப் பாலாணம் கவிதை நூல் வெளியீடும் பரிசளிப்பும்



(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை எழுத்தாளர் மையம் நடாத்திய மருதமகுடம்'கருவாட்டுப் பாலாணம்'முக நூல் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும்,மருதமுனை எழுத்தாளர் மையத்தின் ஸ்தாபகர் ஏ.எல்.ஜூல்கறணி (நீலாவணையூர் அல்ஜ்;) தொகுத்த 'கருவாட்டுப் பாலாணம்' கவிதை நூல் வெளியீடும் சனிக்கிழமை(15-10-2016) மருதமுனை மக்காமடி வீதியில் உள்ள மோற்ரோணி முன்றலில் கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம்(துல்சான்) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப்புக்கு வழங்கி நூல் வெளியீட்டை  ஆரம்பித்து வைத்தார்.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கிண்ணியா அமீர்,கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ்,மருதமுனை கலை இலக்கிய பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டார்.

இங்கு மருதமுனை எழுத்தாளர் மையம் நடாத்திய 'கருவாட்டுப் பாலாணம்'முக நூல் கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மருதமுனை கவிஞர் சத்தார் எம். அஸாத்திற்கு ரூபா 5000 பணப் பரிசும் சாண்றிதழும்,இரண்டாம் இடத்தைப் பெற்ற பூண்டுலோயா கவிஞர் மெய்யன் நடராஜ்க்கு ரூபா 3000 பணப் பரிசும் சாண்றிதழும்,)மூன்றாம் இடத்தைப் பெற்ற மருதமுனை கவிஞர் எம்.எம். விஜிலி ஆகியோருக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம்(துல்சான்), அதிதிகளாகக் கலந்து கொண்ட மருதமுனை கலை இலக்கியப் போரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், ஓய்வு பெற்ற தலைமைக் கிராம அதிகாரி ஏ.எச்.ஏ.ழாஹிர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசில்களையும். சாண்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

இந்தக் கவிதைப் போட்டியில் சேகு முகம்மது இஸ்மாயில்,முபாறக் றஹ்மத்துள்ளா,முகம்மது இஸ்மாயில் உமர் அலி,முகம்மது ஹனிபா தாஜூதீன்,முகம்மது ஹனிபா அப்துல்; கரீம் ஆகியோர் அதிதிகளிடமிருந்து சிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

விஷேட சாண்றிதழ் நதீர் பாறூக்கிற்கு வழங்கப்பட்டது.பல கலை இலக்கிய வாதிகளும்,கவிஞர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  
 
     
மருதமுனை எழுத்தாளர் மையத்தின் கருவாட்டுப் பாலாணம் கவிதை நூல் வெளியீடும் பரிசளிப்பும் மருதமுனை எழுத்தாளர் மையத்தின் கருவாட்டுப் பாலாணம் கவிதை நூல் வெளியீடும் பரிசளிப்பும் Reviewed by Madawala News on 10/20/2016 07:06:00 PM Rating: 5