தேசிய சமத்துவ ஸ்தாபனம் எனும் சிவில் அமைப்பு அம்பாறை உதயம்...



அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பிரமுகவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பின் தலைவர் டாக்டர் வை.எல்.எம். யூசுப் தலைமையில் இச்சிவில் அமைப்பின் உருவாக்கத்தைத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 15ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இவ்வமைப்பின் இலக்கு, நோக்கம் எதிர்கால செயற்பாடு மற்றும் சமகால விடயங்களை தெளிவுபடுத்து கையேடும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு

 இவ்வமைப்பின் எதிர்கால பயண இலக்கு 'ஒரே தேசம் ஒரே மனித இனம்' என்பதாகும், எனவே இவ்விலக்கினை அடைவதற்கு இனங்களுக்கிடையே காணப்படும் பாகுபாடு, நியாயமற்ற தன்மை, அதிகார வெறி, போலி வரலாற்றுக் கோசம், மற்றும் ஆதாரம் போன்றவை களையப்பட்டு சமய ரீதியான பண்பாடு, கலாச்சாரம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் சர்வதேச சட்டம் கூறும் அடிப்படையில் சகலருக்கும் சமஉரிமை, சமஅந்தஸ்த்து, சமவாய்ப்பு போன்றவை கிடைக்கக்கூடிய வகையில் இன ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நோக்கி எமது அமைப்பின் ஜனநாயக போக்கு எதிர்காலத்தில் அமைந்திருக்கும்.
 
 இலங்கை முஸ்லிம்கள் நாட்டில் நிலவும் தேசிய சமத்துவமின்மைகளில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய தனித்துவ சமூகம் என்ற அடிப்படையில் அவர்கள் சார்பில் அச்சமத்துவமின்மைக்கு எதிராக எழுந்து நிற்கும் ஒரு சிவில் அமைப்பாக தேசிய சமத்துவ ஒன்றியத்தின் தோற்றம் அமைகின்றது.
 
தேசிய சமத்துவ ஸ்தாபனம் காலத்தின் அத்தியவசிய தேவையை உணர்ந்து இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் சீரழிந்துள்ள பண்புகளையும் போக்குகளையும் மாற்றியமைத்து உறுதியானதும் சுயநலமற்ற சமூக சிந்தனையுமுடைய சிறந்த சிவில் தலைமைத்துவத்தை உருவாக்கி அதனூடாக அரசியல் மற்றும் மதம்சார் தலைமைத்துவங்களை இணைத்துக்கொண்டு சமூக ஒற்றுமை, ஒருமைப்பாடு எனும் தேசிய நோக்கில் பயணிப்பதும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களை ஜனநாயக வழியில் முறியடித்து ஏனைய சமூகங்களோடு சமத்துவமாகவும் சமஉரிமை, சமஅந்தஸ்த்து பெற்று வாழ பாடுபடுவதும்,  இவ்வமைப்பு உருவாக்கத்தின் அடிப்படை நோக்கங்களில் உள்ளதாகும்.

 இவ்வமைப்பானது, அரசியல், சிவில், சமூக, பொருளாதார, கலாச்சாரம் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி சகலருக்கும் நியாயமும் முன்னேற்றமும் கிடைக்கக்கூடிய வகையில் செயற்படும். மேலும், முஸ்லிம்களின் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அதனை மீட்டெடுப்பதுடன் ஆரோக்கியமான அணுகுமுறை மூலம் முஸ்லிம் சமூகத்தின் நிலப்பற்றாக்குறையை நிவர்த்திக்க சமூக நீதி, சமவுரிமைக் கோட்பாட்டின்கீழ் பாடுபடுவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும என அதில் குறிப்பிடப்பட்டுளளது.
தேசிய சமத்துவ ஸ்தாபனம் எனும் சிவில் அமைப்பு அம்பாறை உதயம்... தேசிய சமத்துவ ஸ்தாபனம் எனும் சிவில் அமைப்பு அம்பாறை உதயம்... Reviewed by Madawala News on 10/16/2016 02:04:00 PM Rating: 5