Ad Space avaiable

கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைந்தால் பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?


-இரஷாத் அஸ்ஸார்-
கிண்ணியாவிற்கு மேலும் அழகு சேர்ப்பதற்காக முன்னால் நகர மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்களின் "அழகிய நகரம் கிண்ணியா" என்ற கருப்பொருளில் 2013.04.30 அன்று உருவானது தான் கிண்ணியா  வரவேற்பு கோபுரம்.

இக்கோபுரத்திற்கான அடிக்கல் எப்போது நாட்டப்பட்டதோ அப்போதிருந்தே பிரச்சனைகளும் தடைகளும் இன்று வரை கடும் போக்காளர்களால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

நீண்ட கால தடைக்கு பின் சில மாற்றங்களுடன்  அரசாங்க அதிபரின் அனுமதியுடன் அண்மையில் கோபுர கட்டுமான பணிகள்  ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பல தடைகளும் பிரச்சனைகளும் பௌத்த பிக்குக்களினால் எற்படுத்தப்பட்டது.

மறைந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அன்று சொன்னார் "சேருவில சிங்களவர்களுக்கான  கலாச்சாரமென்றால்,கோணஸ்வரம் தமிழர்களுக்கான கலாச்சாரமென்றால் கிழக்கு  முஸஸ்லீம்களுக்கு கிண்ணியா கலாச்சார மைய்யமாகும் " என தனது தூய தமிழில் வீரத்தோடு சூழுரைத்தான் என்று.ஆனால் இன்று நடப்பது  என்ன? எங்களுடைய மண்ணில் எங்கள் கலாசாரத்தை பயன்டுத்தி வரவேற்பு கட்டிடத்தை அமைக்க இந்த நல்லாட்சியிலும் ஏன் தடை.

இந்த கோபுரம் அமைப்பதால் பௌத்த கலலாச்சாரத்திற்கு என்ன பாதிப்பு என்ற கேள்வியை அரசியல்வாதிகள் பொது மக்கள் அணைவரும் ஒன்றுபட்டு  தொடுத்து அகிம்சையாய் போராட வேண்டும்.

அதற்கு பதில் கிடைக்காவிட்டால் மக்கள் போராட்டமாக அதனை  மாற்றாமல் இதற்கான தீத்வை பெறமுடியாது.

இன்று கிடைத்த தகவலில் படி முன்னாள் நகர மேயர் Dr. ஹில்மி மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பயனாக இன்று 2016.10.10 

வரவேற்பு கோபுர நிர்மாணப்பணிகளை  மீண்டும் தொடர்வதற்கான அனுமதியை 
மாவட்ட செயலாளர் ,பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுடனான கலந்துரையாடலின்  பின் முன்னாள் நகர மேயர் Dr. ஹில்மி மஹ்ரூப்  அவர்களுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும் கட்டுமான பணிகள் ஆர்ம்பிக்கப்பட்டு தொடரும்போது மீண்டும் தடை வருமா ? என நாம் பொருத்திருந்தே பார்க்க வேண்டும். 

கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைந்தால் பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன? கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைந்தால் பௌத்த கலாச்சாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்பு  என்ன? Reviewed by Madawala News on 10/11/2016 02:07:00 AM Rating: 5