Accaddemy

ஹிரா பவுண்டேஷன் அனுசரனையில் தென் கிழக்கு பல்கலைகழகத்துக்கு பள்ளிவாயல்


இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இயங்கும் ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக ஜும்மா பள்ளிவாயல் இன்று மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரால்  ஜூம்மா தொழுகைக்காக பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்MMM நாஜி  ,ஹிரா பெளண்டேசன் செயலாளர் அஷ்செய்க் ALM மும்தாஸ் மதனி , மெளலவி அலியார் பலாஹி , மெளலவி அமீன் பலாஹி முன்னாள் தவிசாளர் அஸ்பர் JP உட்பட பலரும் கலந்து கொண்டதோடு ஜும்மா உரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்செய்க் அலியார் றியாதி நிகழ்த்தினார்.

இப் பல்கலைக்கழகத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த இப் பள்ளிவாயலை நிர்மாணித்து தந்தமைக்கு இப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் அனைவரும் ஹிரா பெளன்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்


ஹிரா பவுண்டேஷன் அனுசரனையில் தென் கிழக்கு பல்கலைகழகத்துக்கு பள்ளிவாயல் ஹிரா பவுண்டேஷன் அனுசரனையில் தென் கிழக்கு பல்கலைகழகத்துக்கு பள்ளிவாயல் Reviewed by Madawala News on 10/14/2016 10:18:00 PM Rating: 5