Yahya

தெற்காசியாவை சூழ்ந்துள்ள அணுஆயுதப் போர்மேகம்...


தெற்காசிய பிராந்திய நாடுகளில் அணுவல்லமையினை பெற்ற இரு நாடுகளாக இந்தியாவும்,பாகிஸ்தானும் திகழ்கின்றன. 

பூகோளமய அறசியலில் தம்மையும் தம் இருப்பிடத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கோடு பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி 1998-05-11,13 ம் திகதிகளில் இந்தியாவும் அதற்கு இருவாரங்கள் கழித்து 1998-05-28 திகதி பாகிஸ்தானும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொண்டு ஆசிய பிராந்திய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக அணுவல்லமையினை பெற்ற நாடுகளாக தம்மை இனைத்துக்கொண்டன. 

உலக வல்லரசுகளின் எதிர்பையும் மீறி திட்டமிட்ட அடிப்படையில் அணுப்பரிசோதனைகளை மேற்கொண்டு விரல்விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளில் தம்மை இனைத்துக்கொண்ட இவை இரண்டும் தம்மையே அழித்துக்கொள்ளும் முனைப்போடு அணுவாயுத பலப்பரீட்சைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இவை இரண்டுக்குமிடையே அணு ஆயுதப் போர் மூழும்பட்சத்தில் 2.1 கோடி பேர் பலியாவதுடன் இதன் பாதிப்புகளானது அடுத்துவரும் 9 ஆண்டுகளில் 2221 மடங்காக அதிகரிக்குமனவும் அண்மைய ஆய்வொன்றும் உறுதிப்படுத்துகின்றது.

இந்த அணு ஆயுதப் போரின்  விளைவுகளால் உலகம் முழுவதும் 20 கோடி பேர் பாதிப்படைவதோடு தட்வெப்ப நிலை மாற்றம், பருவ நிலை மாற்றம், ஓசோன் மண்டல சேதம் ஆகியவை காரணமாக உலகின் பல பகுதிகளும் பாதிக்கப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போய்விடுவதும் நிச்சயம் ஏணனில் அந்தளவிற்கு அழிவுகளை ஏற்படுத்தும் வல்லமையினை கொண்டுள்ள அணுவாயுதங்களை தம்வசம் வைத்துக்கொண்டுள்ளன.

2015ல் நடத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டின்படி பாகிஸ்தானிடம் 110 தொடக்கம் 130 வரையிலான அணு குண்டுகளும்  இந்தியாவிடம்  90 தொடக்கம் 120 வரையிலான அணு குண்டுகளும் இருக்கலாமன மதிப்பீடுகள் தெரிவிக்கின்றது.

அதனடிப்படையில் பாகிஸ்தான் தன்னிடம்
உள்ள அணு ஆயுதங்களில் 66 சதவீதம் ஏவுகணைகளில்  பொருத்தக் கூடிய வகையில் மாற்றியமைத்துள்ளதுடன் 86 ஏவுகணைகளில் அணு ஆயுதங்களைப் பொருத்திய நிலையிலும் வைத்துள்ளது. 

பாகிஸ்தானின் ஏவுகணையின் பலத்தைபற்றி பரீட்சீத்துப்பார்க்கும்போது  ஹதிப் ரக ஏவுகணைகள் மிகவும் அபாயகரமானதாகவும் இந்தியாவுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றன.இதன் வல்லமையின் மூலம் இந்தியாவின் நான்கு பெருநகரங்களான டெல்லி மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை முற்றிலுமாக தாக்கி அழிக்க முடியுமாக இருப்பதுடன் பெங்களூர் நகரும் இதன் வீச்சல்லைக்குள் காணப்படுவது மிகுந்த அச்சுருத்தலை ஏற்படுத்தி நிற்கின்றது.

மேலும் கவ்ரி ரக ஏவுகணைகள் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களான டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, புனே, நாக்பூர், போபால், லக்னோ ஆகிய நகரங்களைத் குறிவைப்பதுடன் தொலைதூர இலக்குகளையும் தாக்கக்கூடிய ஷாஹீன் ரக ஏவுகணைகள் மூலம் கிழக்கே உள்ள கொல்கத்தாவை மிக எளிதாக அழித்துவிடும் வல்லமை கொண்டுள்ளது

அதுபோல் காஸ்னவி, பால்கன் ரக ஏவுகணைகள் லூதியானா, அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் வரை வந்து தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வல்லமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பால்கன் ஏவுகணைகள் 750 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் தண்மை வாய்ந்தவை 

மறுபக்கம் இந்தியாவை பொருத்தவரை பிருத்வி, அக்னி, பிரம்மோஸ் ரக ஏவுகணைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. இவற்றில் 53 சதவீத அணு ஆயுதங்களைப் பொருத்தி தாக்கி அழிக்க முடியும் 

இந்தியா தன்னிடம் உள்ள பிருத்திவி ஏவுகணைகள் மூலம்  பாகிஸ்தானின் முக்கியநகரங்களான இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லாகூர், கராச்சி, ராணுவ தலைமையகம் உள்ள நவ்ஷாரா ஆகியவற்றை தாக்க முடியும் என்பதோடு அக்கி ஏவுகணைகள் மூலம் முல்தான்,பெஷாவர்,குவெட்டா,குவாடர் துறைமுகம் போண்றவற்றையும் தாக்கி அழிக்க முடியும் 

இருப்பினும் லாகூர், கராச்சியினை தாக்கும்போது அவற்றின் விளைவுகள் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை 
-Muja Ashrafff-
தெற்காசியாவை சூழ்ந்துள்ள அணுஆயுதப் போர்மேகம்... தெற்காசியாவை சூழ்ந்துள்ள அணுஆயுதப் போர்மேகம்... Reviewed by Madawala News on 10/01/2016 04:59:00 PM Rating: 5