Kidny

Kidny

தேசிய சூரா சபையின் கிழக்கு விஜயம்; முழு விபரம் இணைப்பு ...


கடந்த (8,9.10.2016) சனி, ஞாயிறு தினங்­களில் தேசிய சூரா சபையின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்கள் கிழக்கு மாகா­ணத்தின் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டனர். தேசிய சூரா சபையின் தலை­வரும் முன்னை நாள் கல்வி அமைச்சர் கலா­நிதி பதி­யுத்தீன் மஹ்­மூதின் புதல்­வ­ரு­மான தாரிக் மஹ்மூத்  தலை­மையில் இவ்­வி­ஜயம் இடம்­பெற்­றது.

விஜ­யத்­தின்­போது கல்­குடா மஜ்லிஸ் அஷ்­ஷுரா, ஏறாவூர் பள்­ளி­வா­சல்­க­ளது சம்­மே­ளனம், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளது சம்­மே­ளனம், அம்­பாறை மாவட்ட சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­புக்கள் இடம்­பெற்­றன.

அங்கு கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பல்­வேறு பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

தேசிய சூரா சபையின் நோக்­கங்கள், எதிர்­காலத் திட்­டங்கள் என்­பன பற்றி கிழக்கு மாகாண சிவில் அமைப்­பு­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்­பது, பிராந்­திய ரீதி­யாக முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிர­தா­ன­மான சவால்­களை அந்த மக்­க­ளி­ட­மி­ருந்தே கேட்­ட­றிந்து கொள்­வது, அதற்­கான தீர்­வு­களை காணும் மூலோ­பாயத் திட்­டங்­களைப் பற்றி ஆராய்­வது, முஸ்­லிம்கள் எப்­பி­ர­தே­சத்தில் வாழ்ந்­தாலும் அவர்கள் அனை­வரும் ஒரே உடலின் உறுப்­பு­களைப் போன்­ற­வர்கள் என்ற இஸ்­லா­மியக் கருத்தைப் பலப்­ப­டுத்­து­வது என்­பன  இந்த விஜ­யத்­துக்­கான பிர­தான நோக்­கங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன. 

தலைவர் தாரீக் மஹ்மூத்
மேற்­படி விஜ­யத்தில் தலைமை உiரை நிகழ்த்­திய தேசிய சூரா சபையின் தலைவர் ஜனாப் தாரீக் மஹ்மூத் , இஸ்­லாத்தில் ‘சூரா’ எனப்­படும். கூட்டு ஆலோ­சனை மிகுந்த முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. ஒவ்வொரு பிர­தே­சத்­திலும் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை மிகச்­ச­ரி­யாக இனம்­கண்டு அவற்­றுக்கு தீர்க்­க­மான தீர்­வு­களைக் காண்­பதில் இந்தச் சூரா பொறி­மு­றைக்குப் பெரும் பங்­குண்டு.

தேசிய ரீதியில் சூரா கோட்­பாட்டை நாம் அமு­லாக்கி வரு­கிறோம். பிராந்­திய ரீதியில் நீங்­களும் அத­னைக்­க­டைப்­பி­டிக்க வேண்டும்.

துறை­சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு துறைசார் நிபு­ணர்கள் (Sector Specialist) அழைக்­கப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்டு மூலோ­பாயத் திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும். சூரா சபைக்கு கிளை­களை நாட­ளா­விய ரீதியில் அமைக்கும் திட்டம் கிடை­யாது.

ஆனால், பிராந்­திய ரீதியில் இயங்கும் கூட்­ட­மைப்­புக்­க­ளுடன் நெருங்­கிய உறவை வளர்த்து அவற்றைப் பலப்­ப­டுத்தி நெறிப்­ப­டுத்தும் பணியை மட்­டுமே தேசிய சூரா சபை செய்யும். தேசிய ரீதியில் இயங்கும் 18 இயக்­கங்­களும் சமூக சேவை நிறு­வ­னங்­களும் தேசிய சூரா சபையில் அங்கம் வகிப்­பதால் அது ஒரு குடை நிறு­வ­ன­மாக (Umbrella Organization) கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக இயங்கி வரு­கி­றது என அவர் குறிப்­பிட்டார்.

சிராஜ் மஷ்ஹூர், அஜ்­வதீன்
நிகழ்ச்சி நிரலில் அடுத்­த­தாக தேசிய சூரா சபையின் செய­லக உறுப்­பி­னரும்; உரை­யா­ட­லுக்கும் ஆய்­வுக்­கு­மான மையத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ளரும் ஆய்­வா­ள­ரு­மான சிராஜ் மஷ்ஹூர்  மற்றும் தேசிய சூரா சபையின் செய­லக உறுப்­பி­னரும்; இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் சிரேஷ்ட ஆய்­வா­ள­ரு­மான அஜ்­வதீன் ஆகியோர் தேசிய சூரா சபையின் தோற்றம், வளர்ச்சி, நோக்­கங்கள், அதன் கடந்­த­கால, நிகழ்­கால முன்­னெ­டுப்­புகள் போன்ற அம்­சங்­களைப் பற்றி விளக்­க­ம­ளித்­தனர். அவர்கள் தமது உரையில், முஸ்லிம் சமூக முன்­னேற்­றத்­துக்கு கூட்டு முயற்­சியின் அவ­சியம்,  2012 ஐத் தொடர்ந்து வெகு­வாக உண­ரப்­பட்­டது.

முஸ்லிம் சமூ­கத்தின் இருப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக பல செயற்­பா­டுகள் உரு­வெ­டுத்­ததால்; அவற்றை எதிர்­கொள்ள துறை­சார்ந்த நிபு­ணர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் சமூக ஆர்­வ­லர்­களும் கைகோர்த்து ஆய்­வு­களில் ஈடு­பட்டு மூலோ­பாயத் திட்­டங்­களை வகுத்து செயல்­படும் நோக்கில்; 2013 ஆம் ஆண்டு தேசிய சூரா சபை உரு­வாக்­கப்­பட்­டது. இலங்கை நாட்டின் ஒரு­மைப்­பாடு அதன் வளர்ச்சி என்­பதை பிர­தான பொது இலக்­கா­கவும்; முஸ்லிம் சமூ­கத்தின் வளர்ச்சி ஸ்திரப்­பாடு என்­பதை குறிப்­பான இலக்­கா­கவும் கொண்டு அது இயங்கி வரு­கி­றது என்றும் அவர்கள் தெரி­வித்­தனர்.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
அடுத்து “தற்­கால சூழலில் அமா­னி­தங்கள் எனப்­படும் எமது பொறுப்­புக்கள்” எனும் தலைப்பில் ஜாமிஆ நளீ­மிய்­யாவின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் ஜனா­தி­ப­தியால் அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட மதங்­க­ளுக்­கி­டை­யி­லான ஆலோ­சனை சபை (Inter Religious Consultative forum) இன் முஸ்­லிம்கள் சார்­பான அங்­கத்­த­வர்­களில் ஒரு­வரும் தேசிய சூரா சபையின் உப­த­லை­வர்­களில் ஒரு­வ­ரு­மான அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் உரை­ நிக­ழ்த்­தினார். 

தேசிய சூரா சபையால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கிழக்கு மாகா­ணத்­துக்­கான மேற்­படி நிகழ்ச்­சி­களில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், உயர் அரச அதி­கா­ரிகள், உல­மாக்கள், வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள், பள்­ளி­வாசல் தர்ம கர்த்­தாக்கள் உள்­ளிட்ட சமூ­கத்தில் தீர்­மா­னங்­களை எடுக்கும் நிலையில் உள்ள பலரும் வருகை தந்­தி­ருந்­த­மையால் அவ­ரது உரை அவர்கள் எவ்­வ­ளவு பெரிய சமூக பொறுப்­புக்­களைச் சுமந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை உணர்த்தும் வகையில் அமைந்­தி­ருந்­தது. நமது பொறுப்­புக்­களை சரி­வ­ரப்­பு­ரிந்து கொள்ள வேண்­டு­மாயின் நாம் வாழும் சூழல் பற்­றிய சுருக்­க­மான விளக்கம் தேவை என்று அவர் தனது உரையை ஆரம்­பித்தார்.

முஸ்லிம் சமூகம் பல்­வேறு துறை­களில் பின்­ன­டைந்­தி­ருக்­கி­றது என்­பதை நிறுவும் வகையில் புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் தனது உரையை அமைத்­தி­ருந்தார். 

சர்­வ­தேச ரீதி­யாக இன்று இஸ்­லாமும் முஸ்­லிம்­களும் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். நாக­ரீ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள் பற்றி எழுதும் பலர் (Islamophobia) இஸ்லாம் பற்­றிய பீதியை உண்டு பண்ண கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றார்கள். ISIS போன்ற தீவி­ர­வாதக் குழுக்­க­ளது செயல்­பா­டு­களால் இஸ்லாம் கூட தவ­றாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது. இலங்­கை­யிலும் முஸ்லிம் சமூ­கத்தின் தூய நம்­பிக்கைக் கோட்­பா­டு­க­ளுக்கு வேட்டு வைக்கும்  ஷீஆ,காதி­யானி போன்­றன செயல்­ப­டு­கின்­றன. 

அது­மட்­டு­மன்றி, முஸ்லிம் சமூ­கத்தை வேர­றுக்கும் நோக்­குடன் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் இருந்து பல அமைப்­புக்கள் இயங்­கு­கின்­றன. உள்­ளார்ந்த பிரச்­சி­னை­களில் ஆத்­மீக வறுமை, மனித பல­வீ­னங்கள், உட்­பூ­சல்கள், அறி­வீனம், இஸ்லாம் பற்­றிய அறிவில் குள­று­படி, வறுமை, தர­மான தலை­மை­க­ளுக்­கான பற்­றாக்­குறை, அர­சி­யல்­வா­தி­க­ளது தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்கள், குடும்ப அமைப்பு எனும் நிறு­வனம் ஆட்டம் காண்­பது, வெளி­நாட்டு வேலை வாய்ப்பின் பாதக விளை­வுகள், இளைஞர் பிரச்­சி­னைகள் போன்­ற­ன­வற்றை குறிப்­பி­ட­மு­டியும்.

முஸ்லிம் சமூ­கத்தின் 22% ஆன­வர்கள் வறு­மையில் வாடு­கி­றார்கள். 14% ஆன முஸ்­லிம்கள் அடிப்­படை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்­ய­மு­டி­யாத நிலையில் உள்­ளனர். சுகா­தாரத் துறையில் முஸ்லிம் சமூகம் மிக­வுமே பின்­நி­லையில் உள்­ளது. பிற­ச­மூ­கங்­க­ளு­ட­னான உற­வுகள் பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கின்­றன. அவர்கள் எம்மைப் பற்றித் தப்­பான மனப்­ப­தி­வு­க­ளுடன் வாழும் அதே­வேளை அவர்­களிற் சிலர் எம்மைப் பற்­றிய மிகப்­பி­ழை­யான கருத்­துக்­களை மீடி­யாக்கள் உட்­பட இன்னும் பல வழி­மு­றைகள் ஊடாகப் பரப்பிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இது இன உற­வு­களை மென்­மேலும் பல­வீ­ன­மாக்­கு­கி­றது. பெரும்­பான்­மை­யி­னரைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டில் முஸ்­லிம்­களால் எப்­ப­டி­யுமே வாழ முடி­யாது என்­பதால் மீள் நல்­லி­ணக்­கத்­துக்கும் சமா­தான சக­வாழ்­வுக்­கு­மான முயற்­சிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய உட­ன­டித்­தேவை இருந்­து­வ­ரு­கி­றது.

 முஸ்லிம் சமூகம் பண்­பாட்டுத் துறையில் வீழ்ச்சி கண்­டி­ருப்­பதால் நிலைமை மேலும் மோச­ம­டைந்­து­வ­ரு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தில் மத­மாற்றம் தாரா­ள­மாக இடம்­பெ­று­வ­துடன் தனித்­து­வத்தை இழக்கும் நிலையில் பலர் உள்­ளனர். 2014, 2015 பல்­க­லைக்­க­ழக பிர­வே­சத்தை எடுத்து நோக்­கினால் எமது விகி­தத்தை விட மிகவும் குறைந்த மட்­டத்­தி­லேயே பெரும்­பா­லான துறை­க­ளுக்கு மாண­வர்கள் நுழை­கி­றார்கள்.

வர்த்­தகப் பிரி­வுக்கு 2.4%,  மிருக வைத்­திய துறைக்கு 3%, பொறி­யியல் துறைக்கு 4.6% போன்ற தர­வுகள் முஸ்லிம் சமூக கல்வி மட்­டத்­துக்கு சான்­று­க­ளாகும். ஆனால், இந்த நாட்டில் முஸ்­லிம்கள் ஒரு சிறு­பான்­மை­யினர் என்ற வகையில் அதி­க­மான உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்­றி­ருந்தும் அவற்றைப் பயன்­ப­டுத்தி எம்மை வளர்த்துக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. இதற்­கெல்லாம் சமூ­கத்தின் தலை­மை­களும் புத்­தி­ஜீ­வி­களும் துறைசார் நிபு­ணர்­க­ளுமே பொறுப்­பா­ன­வர்கள் 

மறுமை நாளில் அல்லாஹ் உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள நிஃமத்­துக்­களை சமூக முன்­னேற்­றத்­துக்­கா­கவும் அதன் ஸ்திரப்­பாட்­டுக்­கா­கவும் எந்­த­ளவு தூரம் பயன்­ப­டுத்­தினீர்கள், தியாகம் செய்­தீர்கள் என விசா­ரிப்பான். இது அமா­னி­த­மாகும். பிரச்­சி­னை­களைத் தீர்க்க இஸ்லாம் 'சூராவை' சிறந்த அணு­கு­மு­றை­யாகக் காண்­கி­றது. "(நபியே) நீர் அவர்­க­ளுடன் கலந்­தா­லோ­சிப்­பீ­ராக", "அவர்கள் தமது விவ­கா­ரங்­களை கலந்­தா­லோ­ச­னை­யுடன் அமைத்­துக்­கொள்­வார்கள்" போன்ற குர்­ஆ­னிய வச­னங்­களும் நபி­களார் (ஸல்) அவர்­க­ளது வழி­காட்­டல்­களும் நடை­மு­றை­களும் இதனை வலி­யு­றுத்­து­கின்­றன.

எனவே, பிரச்­சி­னைகள் வந்த பின்னர் தீர்­வு­களைக் காண்­ப­தை­விட வர­முன்னர் முன்­னேற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது அவ­சி­ய­மாகும். முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள மிகப்­பெ­ரிய பிரச்­சினை உணர்ச்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டு­வ­தாகும். ஆய்வு, தூர­நோக்கு, சம­யோ­சிதம், கூட்­டான ஆலோ­சனை என்­பன தான் இன்று தேவைப்­ப­டு­கி­றது.

அதற்­கான களத்­தையே தேசிய சூரா சபை அமைத்­து­வ­ரு­கி­றது என்றும் அஷ்ஷைய்க் பளீல் தெரி­வித்தார்.

பேரா­சி­ரியர் எஸ்.எச்.ஹஸ்­புல்லாஹ்
பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், தேசிய சூரா சபையின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் எஸ்.எச்.ஹஸ்­புல்­லாஹ்வும் உரை நிகழ்த்­தினார்.அவர் தனது உரையில்,

  இலங்­கையின் அர­சியல் ரீதி­யாக அடுத்து வரக்­கூ­டிய நாட்­களும் மாதங்­களும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மிக முக்­கி­ய­மான கால­கட்­ட­மாக அமை­ய­வுள்­ளது. எதிர்­கா­லத்தில் வரப்­போகும் அர­சியல் ரீதி­யான தீர்­மா­னங்­களில் கிழக்கில் வாழக்­கூ­டிய முஸ்­லிம்­களின் நிலைப்­பாட்­டினை ஒரு­மித்தும் உறு­தி­யா­கவும் குர­லெ­ழுப்ப வேண்­டியது ஒரு முக்­கிய தரு­ண­மாகும். 

இதில் முக்­கிய விட­ய­மாக அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன் மேலும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக பல முக்­கி­ய­மான தீர்­வுத்­திட்­டங்கள் போடப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

எனவே இக்­கா­ல­கட்­டத்தில் தங்­க­ளு­டைய வேண்­டு­கோ­ளையும்  அபி­லா­ஷை­க­ளையும் தெளி­வாக எடுத்து வைப்­ப­தற்கு முஸ்­லிம்கள் தயா­ராக இருக்க வேண்டும்.

ஆனால், கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­களில் இது­வ­ரையில் முஸ்­லிம்­களின் தெளி­வற்ற தன்­மையும் பல­வீ­ன­மான போக்கும் இருப்­ப­தை அவ­தா­னிக்க முடி­கி­றது. 

கிழக்கு முஸ்­லிம்கள் கடந்த கால யுத்தம் மற்றும் இனப்­பி­ரச்­சி­னை­களால் தமக்­கேற்­பட்ட பாதிப்பை சரி­யான முறையில் எடுத்­து­ரைக்க தயா­ராக வேண்டும்.

உதா­ர­ண­மாக ஓட்­ட­மா­வடி, ஏறாவூர், காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு தேசிய சூரா சபை விஜயம் மேற்­கொண்ட போது அவ­தா­னித்த முக்­கி­ய­மான விடயம் யாதெனில் அங்­குள்ள மக்கள் தங்­க­ளு­டைய கவ­லை­களை வாய்­மூலம் வெளிப்­ப­டுத்­தி­னாலும் அதற்கு சான்­றாக எந்­த­வொரு ஆவ­ணமும் அவர்­க­ளிடம் இல்லை. இது இம்­மக்கள் எதிர்­வரும் தீர்­வுத்­திட்­டங்­களின் மூலம் நியாயம் பெற்­றுக்­கொள்ள தங்­களை தயார் படுத்­தா­மையை காட்­டு­கி­றது.

குறிப்­பாக கோர­ளைப்­பற்று பகு­தியில் மாத்­திரம் முப்­ப­துக்கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு இன்று வரையும் அக­தி­க­ளாக வாழ்ந்து வரு­கி­றார்கள். ஆனால் அவர்கள் இழந்த சொத்­துக்கள் பற்­றிய ஆவ­ணங்கள் இல்­லா­மையால் தத்­த­மது ஊர்­க­ளுக்கு திரும்­பச்­செல்­லவோ சர்­வ­தே­சத்­திற்கு முன் தங்கள் குறை­களை எடுத்து வைக்­கவோ முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. 

மேலும் யுத்தம் நில­விய காலத்தில் விரி­வ­டைந்த தமிழ் முஸ்லிம் உறவை கட்­டா­ய­மாக கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை உள்­ளது. மொழி ரீதி­யாக ஒன்று பட்ட, ஒரே பிர­தே­சத்தில் வாழக்­கூ­டிய இம்­மக்­க­ளுக்­கி­டையில் பரஸ்­பரம் புரிந்­து­ணர்வை எற்­ப­டுத்­து­வது காலத்தின் தேவை­யாக உள்­ளது. 

 தொகு­தி­வா­ரியாகவும், கலப்பு முறை­யிலும்; தேசிய ரீதி­யா­கவும் (Proportional Representation) மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்கும் தேர்தல் அமைப்பு முறை மாற்­றத்தின் விட­யத்­திலும் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு எது என்­ப­தனை இது­வரை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். இவ்­வி­ட­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எந்த முறை உகந்­தது என்­பதில் தீர்­மானம் எட்­டப்­பட்டு அவ்­வி­ட­யத்தை தெரி­யப்­ப­டுத்­து­வதும் முக்­கி­ய­மாகும்.

அதிலும் குறிப்­பாக முஸ்லிம் மக்கள் மூல­மாக முஸ்லிம் தலை­வர்கள் அறி­வூட்­டப்­படல் வேண்­டு­மென்­பதும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். 

   இப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் இருக்­கக்­கூ­டிய ஊர்­வாதம், பிர­தேச வாதம், கட்சி பேதம் போன்­ற­வற்றைக் களைந்து மிக நிதா­ன­மா­கவும் ஒற்­று­மைப்­பட்டும் ஒரு­மித்த குரலில் தங்­க­ளு­டைய தேவை­களை முன்­வைப்­ப­துடன் அப்­ப­கு­தியில்  வாழக்­கூ­டிய தமிழ், சிங்­கள மக்­க­ளுடன் இருக்­கக்­கூ­டிய உறவின் விரி­சல்­களை களைந்து அவர்­க­ளுடன் மனி­த­ாபி­மான ரீதி­யா­கவும் பரந்த மனப்­பான்­மை­யோடும் நடக்க வேண்­டிய தேவையும் காணப்­ப­டு­கி­றது.இப்­பி­ர­தே­சத்தில் வாழும் சிங்­கள தமிழ் மக்கள் முஸ்­லிம்கள் அவர்­க­ளுடன் நடந்து கொள்ளும் முறை­களால் ஒரு விரக்­தி­யான நிலை­யி­லேயே உள்­ளார்கள் என்­பது குறிப்­பாக சொல்ல வேண்­டிய விட­ய­மாகும்.

ஆகவே அவர்­களின் இந்த மாற்றம் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் நாட்டின் பல்­வேறு பட்ட பகு­தியில் சிறு­பான்­மை­யாக வாழக்­கூ­டிய ஒட்டு மொத்த முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்­திற்கும் முக்­கிய திருப்­பு­மு­னை­யாக இருக்­கு­மென்­ப­தையும் அவர்கள் உண­ரக்­க­ட­மைப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.அத்­துடன் மற்ற சமூ­கங்­க­ளுடன் ஒன்று பட்டால் தங்­க­ளு­டைய தேவை­களை முன்வைப்­பது இல­கு­வா­கி­விடும் என்­ப­தையும் அவர்கள்  உண­ர­வேண்டும் என பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

கலந்­து­கொண்­ட­வர்­க­ளது பங்­க­ளிப்பு
நான்கு இடங்­களில் இடம்­பெற்ற கூட்­டங்­க­ளுக்கு சமூ­கத்தின் முக்­கி­ய­மான பொறுப்­புக்­களை வகிக்கும் பல தரப்­பட்­ட­வர்­களும் வருகை தந்­தி­ருந்­த­துடன் அவ்­வப்­பி­ர­தே­சங்­களில் எதிர்­நோக்­கப்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக பலரும் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­காக சந்­தர்ப்­பங்­களும் வழங்­கப்­பட்­டன.

கோரிக்­கைகள் முன்­மொ­ழி­வுகள் ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் பிராந்­திய முயற்­சிகள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கிய ஆவ­ணங்­களும்  தேசிய சூரா சபைக்கு வழங்­கப்­பட்­டன. வருகை தந்­தி­ருந்­த­வர்கள் மிகவும் உற்­சா­கவும் பெரும் எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் கருத்­துக்­களைப் பகிர்ந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­லா­காது என்ற கருத்தை பலரும் வலி­யு­றுத்­தினர். முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் இழக்­கப்­பட்­டி­ருப்­பது பிர­தான பிரச்­சி­னை­களில் ஒன்­றாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது. கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு மீளவும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதன் அவ­சியம் உள்­ளது என்றும் பரஸ்­பர நம்­பிக்­கையும் புரிந்­து­ணர்வும் வளர்க்­கப்­பட வேண்டும் என்றும் பேசப்­பட்­டது.

நிரு­வாக சேவைக்கு முஸ்­லிம்கள் உள்­வாங்­கப்­ப­டு­வது குறை­வாக இருப்­பதால் அத்­து­றைக்­கான முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளது தொகையை அதி­க­ரிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை சூரா சபை மேற்­கொள்ள வேண்டும்.

இளை­ஞர்­க­ளது ஒழுக்கம், கல்வி, வாழ்வு மிகவும் அடி­மட்­டத்தில் இருப்­பதால் அதனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்கள் வகுக்­கப்­பட வேண்டும். அர­சியல் தலை­மைகள் சமூக மட்டப் பிரச்­சி­னை­களை விளங்கிக் கொள்­வ­திலும் தீர்வு காண்­ப­திலும் விடும் தவ­றுகள் களை­யப்­பட்டு அவை மென்­மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­குள்ள பலத்­தை­விட சிவில் அமைப்­புக்­க­ளுக்­கான பலம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். பாட­சா­லை­களில் உள்ள ஆசி­ரியர் பற்­றாக்­கு­றைக்குத் தீர்­வுகள் காணப்­பட வேண்டும். மீடி­யாக்கள் சமூக மேம்­பாட்­டுக்கு ஆற்­ற­வேண்­டிய பணிகள் பல இருக்­கின்­றன.

ஆனால், அவை எதிர்­பார்த்த பணி­களில் ஈடு­ப­டு­வது குறைவு போன்ற பல்­துறை சார்ந்த கருத்­துக்­களும் ஆதங்­கங்­களும் அங்கு முன்­வைக்­கப்­பட்­டன. தேசிய சூரா சபை சமூ­கத்தில் ஒரு பல­மான அமைப்­பாக மாற­வேண்டும் என்ற கருத்தும் அங்கு தெரி­விக்­கப்­பட்­டது. 

கருத்துப் பரி­மா­ற­லுக்கு என்று அதி­க­நேரம் ஒதுக்­கப்­பட்­ட­துடன் அந்த நிகழ்ச்­சியை தேசிய சூரா சபையின் முன்னாள் உப­த­லை­வர்­களில் ஒரு­வரும்; அதன் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும்; முஸ்லிம் கல்­வி­மா­நாட்டின் பொதுச் செய­லா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி ரஷித் எம்.இம்­தியாஸ் நடாத்­தி­வைத்தார். சபையில் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் அனைத்தும் பதி­வு­செய்­யப்­ப­டு­வ­தா­கவும்; தேசிய சூரா சபையின் நிறை­வேற்றுக் கூட்டம் நடை­பெறும் போது அவை ஆலோ­ச­னைக்­காக முன்­வைக்­கப்­படும் என்றும் தெரி­வித்தார்.

கிழக்கு மாகாண விஜ­யத்­தின்­போது தேசிய சூரா சபையின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும்; கொழும்பு பெரிய வாசல் பிர­தம பேஷ் இமா­மு­மான மௌலவி எம்.தஸ்லீம், நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ரமீஸ் அபூபக்கர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி ருடானி ஸாஹிர், செயலக உறுப்பினர்களான சகோ. சதாத் (இஸ்லாஹீ), சகோ. இஹ்திஸாம் போன்றோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகமூட்டுவதாகவும், கிழக்கு மாகாண முஸ்லிம்களது அபிலாஷைகளையும், தேவைகளையும், அபிப்பிராயங்களையும் நேரில் சென்று அறிந்துகொள்வதற்கான அருமையான சந்தர்ப்பமாகவும் அமைந்ததாக தேசிய சூரா சபை கருதுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் கணிசமான அறிவுப் புலைமையாளர்களும், துறைசார் நிபுணர்களும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அந்த வளங்களை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும்; முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான கூட்டிணைந்த திட்டங்கள் வகுக்கப்படுவதற்கான தேவை இருப்பதாகவும் தேசிய சூரா சபை கருதுகிறது. 

இஸ்லாம் வலியுறுத்தும் 'சூரா' பொறிமுறையினூடாகவே இது சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில்தான் அல்லாஹ்வின் அருளும் நல்ல பல விளைவுகளும் கிடைக்கக் காரணமாக அமையும் என்றும் தேசிய சூரா சபை உறுதியாக நம்புகிறது. கிழக்கு மாகாண விஜயத்தின்போது அப்பிராந்திய மக்கள் சூராசபை உறுப்பினர்களை அன்பாக வரவேற்று உபசரித்தமைக்காகவும்; நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டமைக்காகவும் உளமார்ந்த நன்றிகளை அது தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது.
 
கிழக்கு மாகாணத்தின் மற்றுமொரு மாவட்டமான திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயமொன்றை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சூராசபை மேற்கொள்ளவிருக்கிறது.

வல்ல அல்லாஹ் எமது முயற்சிகளில் உளத்தூய்மையைத் தந்து எமக்கு பக்கபலமாக இருப்பானாக.

-Vidivelli -

தேசிய சூரா சபையின் கிழக்கு விஜயம்; முழு விபரம் இணைப்பு ... தேசிய சூரா சபையின் கிழக்கு விஜயம்; முழு விபரம் இணைப்பு ... Reviewed by Madawala News on 10/16/2016 11:56:00 PM Rating: 5