இலங்கை அரசின் மவுனத்தை கண்டித்து கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம்


இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜெரூஸலம் நகரில் அல் குத்ஸ் வளாகத்துக்குள் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஹரம் அல் ஷரப் பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் 2016 அக்டோபர் 13ல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது இலங்கை அந்த வாக்கெடுப்பில் இருந்து விளகிக்கொண்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிடிய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்னால் இடம்பெறவுள்ள இந்த ஆர்பாட்டத்தினை கூட்டு எதிர்கட்சியின் முஸ்லீம் முற்போக்கு முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இன்று கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிர்கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற இது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு இடம்பெற்றபோது 

அங்கு கருத்து வெளியிட்ட முஸ்லீம் முற்போக்கு முன்னணின் முக்கியஸ்தர்களான அஸ்வர் ஹாஜி, குருநாகல் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார்,முஸ்லீம் முற்போக்கு முன்னணியின் பேருவளை முக்கியஸ்தர் ஆசாப் அஹ்மட் ஆகியோர் இந்த ஆர்பாட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்கள்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிடிய ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்னால் ஜும்மா தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ள இந்த ஆர்பாடத்தில் கூட்டு எதிர்கட்சியின் முக்கிஸ்தர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் , விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்த ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசின் மவுனத்தை கண்டித்து கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் இலங்கை அரசின் மவுனத்தை கண்டித்து கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் Reviewed by Madawala News on 10/24/2016 03:08:00 PM Rating: 5