Free Space

அவதானம் ! இப்படியும் திருடுகிறார்கள். ..


ஏ டி எம்மில் பணம் எடுக்கவரும் நபர்களின்   ஏடி எம் அட்டைகளை நூதன முறையில் திருடி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் நபர் ஒருவர் புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகியுள்ள 30 வயதான குறித்த நபர் போலியான ஏ டி எம் கார்ட்கள் சகிதம் வங்கி ஏ டி எம் களுக்கு முன்னாள் அனைவரும் மதிக்கத்தக்க வகையில் ஆடை அணிந்து நின்று கொண்டு,ஏடி எம்மில் பணம் எடுக்க தெரியாமல் உதவி கோருபவர்களுக்கு உதவ முன்வருவாரம் .

அவர்களது ஏ டி எம்மை கையில் எடுத்து  ரகசிய எண்ணை கேட்டரிந்த பின்னர் அவர்களுடன் உரையாடும் கேப்பில் கையில் இருக்கும் உண்மையான ஏடி எம் அட்டைக்கு பதில் தன்னிடம் வைத்திருக்கும் அதே வங்கி போலி ஏ டீ எம் அட்டையை மெஷினில் செலுத்திவிடுவாராம்.

பின்னர் அந்த அட்டை செயல்படவிக்லை வங்கிக்கு கடிதம் மூலம் அறிவித்து அட்டையை மாற்றுக்கள் என அறிவுரை வழங்கி பணம் எடுக்க வந்தவர்களை அனுப்பிவிடுவாராம்.

அட்டை உரிமையாளர் சென்ற பின்னர்  தான் பதுக்கிகொண்ட ஏ டி எம் மூலம்  அந்த கணக்கில் உள்ள பணத்தை அப்படியே அவர் சுருட்டி விடுவதாக விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இந்த நூதன திருட்டு மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.


அவதானம் ! இப்படியும் திருடுகிறார்கள். .. அவதானம் ! இப்படியும்  திருடுகிறார்கள். .. Reviewed by Madawala News on 10/24/2016 07:41:00 AM Rating: 5