Free Space

மத்திய மாகாண சபையில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு ...


மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு (18.10.2016) மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது சபை முதல்வர் எல்.டி.நிமலசிரி மற்றும் 

போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன முதலானோர் ஊடகவியலாளர்கள் தொடர்பாக கூறிய கருத்தை தொடர்ந்த அனைத்து ஊடகவியளாலர்களும் சபையில்
இருந்து வெளியேறி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

கடந்த மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு சபையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.


மத்திய மாகாண சபையில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்து ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்காவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண சபையில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு ... மத்திய மாகாண சபையில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு ... Reviewed by Madawala News on 10/18/2016 10:53:00 PM Rating: 5