Ad Space avaiable

கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது


மத்திய வங்கியின் முறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதன் போதே அங்கு கருத்து வெளியிட்ட கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனுக்கு இந்த முறி விநியோகத்துடன் நேரடி தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்த கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இதனுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

54 பக்கங்கங்களைளைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு அறிக்கைகளுக்கும், கோப் குழுவிலுள்ள 16பேர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 9பேர், இணை அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இவ்விரு அறிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை.

கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது Reviewed by Madawala News on 10/28/2016 11:07:00 AM Rating: 5