Oceas

புத்தளத்தில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணிக்குஅழைப்பு


கொழும்பில் இருந்து புத்தளம் அருவக்காட்டு பிரதேசத்தில் தட்டப்படவுள்ள கொழும்பு குப்பைகூள செயத்திட்டத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்று புத்தளத்தில் இருக்கும் இளைஞர் அமைப்புக்களின் ஏற்பாட்டோடும் புத்தளத்தில் இருக்கும் அனைத்து மத அமைப்புக்களின் தலைமையில் ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த எதிர்ப்பு ஆட்பாட்டத்திற்கு புத்தளம் மாவட்ட பொது மக்கள்சமுக சமய மற்றும் அரசியல் தலைமைகள் மற்றும் ஏனைய இயக்கங்கள் அனைத்தும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைப்புவிடுக்கிறோம்.

புத்தளம் பஸ் தரிப்பிடத்தில் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துகொள்கிறோம். நமது ஊரை பாதுகப்பாது நமது முதல் உரிமைநமது வாக்குகளால் அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசிடம் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரள்வோம் வாருங்கள்.

இவ் மக்கள் பேரணிக்கு தலைவராக பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் பீ.எம்.ஏ. ஜனாப்ஒருங்கிணைப்பாளர்களாக நாஸிக் சமான்லிப்டி ஜமால்இன்ஜினியர் நப்ராஸ் செய்யத்,​ டில்ஹஸான் சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மக்கள் ஒன்று திரட்டலுக்காக முஹம்மத் நசீப்நிதி சேகரிப்பு நிமித்தம் அஷாறுக்ஊடக ஒருங்கிணைபாளராக ஆசிரியர் முஹ்ஸிஹனான் அஹ்மத்நிகழ்வு திட்டமிடலுக்காக சட்டத்தரணி அஸ்ரக்சுலோகங்கள் மற்றும் பேனர் ஏற்பாட்டுக்காக அம்ஹர் ஹுசைன்கள ஆயத்தங்களுக்காக இப்லால் அமீன் மற்றும் பிறமத அமைப்பினர் ஏற்பாட்டுக்காக டில்ஹஸான் சிராஜ் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Team CleanPuttalam

 

புத்தளத்தில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணிக்குஅழைப்பு புத்தளத்தில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணிக்குஅழைப்பு Reviewed by Madawala News on 10/05/2016 08:41:00 PM Rating: 5