Kidny

Kidny

இந்தியாவின் பக்கம் சார்ந்து பாகிஸ்தானை புறக்கணிப்பது மிகப்பெரிய ராஜதந்திர தவறு !


(க.கம­ல­நாதன்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு பார்­வைக்கு மாத்­தி­ரமே ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­வ­தாக அமையும். அதன் உண்மை வடிவம் சமஷ்­டியை உள்­ள­டக்­கி­ய­தா­கவே இருக்கும். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தா­கவே அமையும் என தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.


சார்க் மாநாடு விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் பக்கம் சார்ந்து நட்பு நாடான பாகிஸ்­தானை புறக்­க­ணிக்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பாடு இரா­ஜ­தந்­திர அடிப்­ப­டை­யி­லான மிகப்­பெ­ரிய தவ­றெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.


தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று திங்கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள அறை­யி­லி­ருந்து கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்­னவே கட­மை­யாற்­று­கின்றார். கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து கொண்டு கூட்­ட­மைப்பின் கீழே அர­சி­ய­ல­மைப்பு புத்­து­ரு­வாக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்தில் உரு­வாகும் அர­சி­ய­ல­மைப்பின் வடிவம் எவ்­வா­றி­ருக்கும் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். பிரி­வி­னை­வா­தத்­திற்கு வழி­ச­மைக்கும் ஒரு சாச­ன­மா­கவே அது அமைந்­தி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை. ஆனால் இந்த அர­சி­ய­ல­மைப்பில் இலங்கை ஒரு ஒற்­றையாட்சி நாடு என்ற சரத்து தொடர்ந்தும் பேணப்­படும். 

பெய­ரிலும்,காட்­சி­யிலும் ஒற்­றையாட்­சிக்­கான ஒரு அர­சி­ய­ல­மைப்­பாக இது இருந்­தாலும் உண்­மை­யாக இது சமஷ்டி வடி­வத்­தையே கொண்­டி­ருக்கும். இதன் வடி­வத்தை சுல­ப­மாக உணர்ந்­து­கொள்ள அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க எமக்கு உதவி செய்­துள்ளார். அவர் தற்­போது மாயா திரைப்­ப­டத்தில் பெண் வேடத்தில் நடித்­துள்ளார். அவரின் அலங்­கார செயற்­பா­டுகள் அவரை ஒரு பெண் என்றே எண்ண வைக்­கின்­றது. 

ஆனால் அவர் ஒரு ஆண் என்ற உண்­மையை சக­லரும் அறிவோம். புதிய அர­சி­ய­ல­மைப்பும் இது­போன்று பார்­வைக்கு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­வ­தா­கவும் உண்­ மையில் சமஷ்­டியை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருக்கும்.


சார்க் மாநாடு புறக்­க­ணிப்பு

கடந்த வெள்­ளிக்­கி­ழமை எமது நாட்டின் இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களில் மிகப்­பெ­ரிய தவ­றொன்று இழைக்­கப்­பட்­டுள்­ளது. நவம்பர் மாதம் நடை­பெ­ற­வி­ருந்த சார்க் மாநாட்­டினை இலங்கை புறக்­க­ணித்­துள்­ளது. இந்­தியா பாகிஸ்­தானை ஆக்­கி­ர­மித்­து­விட்டு பாகிஸ்­தானில் இடம்­பெறும் மாநாட்­ டினை புறக்­க­ணிப்­ப­தாக நாடகம் ஆடு­கின்­றது. 


சார்க் சாச­ன­திற்­க­மைய மாநாட்டில் 8 அங்­கத்­த­வர்­களும் பங்­கேற்­கா­விட்டால் மாநாடு நடத்த முடி­யாது. அனை­வரும் பங்­கேற்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனால் இந்­தியா செல்­லா­விட்­டாலும் மாநாடு இடம்­பெ­றாது. அது தெரிந்தும் பங்­க­ளாதேஷ் மற்றும் பூட்டான் உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அழுத்தம் கொடுத்து சார்க் மாநாட்­டினை புறக்­க­ணிக்­கு­மாறு இந்­தியா கூறி­யுள்­ளது மட்­டு­மன்றி அந்தச் செயற்­பாட்டில் வெற்­றியும் கண்­டது.


இவ்­வா­றான நிலை­யி­லேயே தற்­போது இந்­தியா, இலங்­கையின் மீது அழுத்­தத்தை பிர­யோ­கித்து மாநாட்டை புறக்­க­ணிக்கச் செய்­துள்­ளது. இதனால் இலங்­கையின் சுயா­தீன தன்­மையும் இந்­தியா முன்­னி­லையில் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை இந்த அறி­விப்பை விடுக்கும் முன்­னரே மாநாடு நடக்­காது என்­பது தெரிந்த விட­ய­மாகும்.


இவ்­வா­றான நிலையில் இந்­தி­யாவை திருப்­தி­ப்ப­டுத்தும் குறு­கிய நோக்­கத்தில் பாகிஸ்­தானை பகைத்­துக்­கொள்­வது. முறை­யான செய­லல்ல. இந்­தி­யாவின் பக்­க­மி­ருந்து பாகிஸ்­தானை புறக்­க­ணிப்­பது இரா­ஜ­தந்­திர ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பார­தூர­மான தவ­றாகும். 1991 ஆம் ஆண்டு இதே­போன்ற செயற்­பாட்­டினை இலங்­கைக்கு இந்­தியா செய்­தது. அதனால் இலங்­கையில் சார்க் மாநாடு நடத்தும் சந்­தர்ப்பம் இல்­லாது போனது. அதன்­போதும் இலங்­கைக்கு பாகிஸ்­தான் உத­வி­யது. இன்று இலங்கை என்ன செய்­கின்­றது. எதி­ரி­யுடன் இணைந்து நண்­பனை தாக்­கு­கின்­றது. அதே­நேரம் யுத்­த­கா­லத்தில் புலி­களை பயிற்­று­வித்து இலங்­கைக்கு அனுப்­பி­யது இந்­தியா என்­பது சக­லரும் அறிந்த விட­ய­மாகும். அதனால் புலி களை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது வலு­வ­டைந்­தனர் என்றார். 


அந்த நேரத்தில் பாகிஸ்தான் இலங்­கைக்கு சர்­வ­தேச ஆயு­தங்­களை பெற்­றுக்­கொ­டுத்து யுத்த வெற்றிக்கு உதவியது. அவ்வாறான நட்பு நாட்டை பகைத்துக்கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஏற்பட்ட போதும் இலங்கை இவர்களை சமாதானப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறான நிலை மீண்டும் வந்துள்ளது. ஆனால் இலங்கை பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளது. 


இன்று பாகிஸ்தானை புறக்கணித்து அவர்களை பகைத்துக்கொண்டுள்ள நிலையில் புலிகள் மீண்டும் வரும்பட்சத்தில் அவர்களை கட்டுப்படுத்த எந்தவொரு நாடும் உதவிக்கு வராது என்றார்.

இந்தியாவின் பக்கம் சார்ந்து பாகிஸ்தானை புறக்கணிப்பது மிகப்பெரிய ராஜதந்திர தவறு ! இந்தியாவின் பக்கம் சார்ந்து பாகிஸ்தானை புறக்கணிப்பது மிகப்பெரிய ராஜதந்திர தவறு ! Reviewed by Madawala News on 10/04/2016 10:24:00 AM Rating: 5