புதிய பயங்கரவாத சட்டத்திற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு ...


இலங்கையில் ஏற்கெனவே உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ள நிலையில் அதற்கு அனைத்து முஸ்லீம் கட்சிகளும் நேற்றைய அமைச்சரவையிலே கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமைச்சர்  மங்கள சமரவீர ஜெனிவாவில் வாக்காளித்திருந்த சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட யோசனைக்கு பதிலாக இலங்கை பாதுகாப்பு தரப்பு முன்வைத்துள்ள யோசனைகளின் வரைவின் குறிப்பிடப்பட்டுள்ள  மிகவும் பாரதூராமான இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. 

நீண்டகாலமாக தடுத்து வைத்தல் , குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட முடியும் என்ற இரண்டு விடயங்களும் பயங்கரவாத தடைசட்டத்தில் மிக மோசமான விடயங்களாக காண்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் பீ பீ சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயங்கரவாத சட்டத்திற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு ... புதிய பயங்கரவாத சட்டத்திற்க்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு ... Reviewed by Madawala News on 10/14/2016 12:22:00 AM Rating: 5