Accaddemy

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்...


நீதியான சமுகத்திற்கான அமைப்பு தெரிவிப்பு

அமைச்­ச­ர­வையில் எதிர்­வரும் தினங்­களில் மாற்றம் செய்­யப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சிவில் அமைப்­புக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக நீதி­யான சமூ­கத்­திற்­கான அமைப்பின் இணைப்­பாளர் பேரா­சி­ரியர் சரத் விஜே­சூ­ரிய தெரி­வித்­து ள்ளார்.

சில முக்­கிய அமைச்­சர்­க­ளு க்கு எதி­ராக பாரிய மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் சில அமைச்­சுக்கள் உரிய முறையில் செயற்­ப­டு­வ­தில்லை எனவும் இதனால் அமைச்­ச­ர­வையில்  மாற்றம் செய்­யு­மாறு கோரி மகஜர் ஒன்று ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

அண்­மையில் ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­போது இந்த மகஜர் வழங்­கப்­பட்­டுள்­ளது.

சில முக்­கிய அமைச்­சர்கள் பாரிய மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்ள அதே­வேளை, அவற்றை நிரூ­பிக்­கக்­கூ­டிய கார­ணி­களும் காணப்­ப­டு­கின்­றன. இது தொடா்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யாடி சில அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... Reviewed by Madawala News on 10/30/2016 12:21:00 PM Rating: 5