ஜனாதிபதி மைத்ரிக்கு ஈரான் ஜனாதிபதி பராட்டு !

நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஈரான் – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.

தாய்லாந்தில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹசன் ரொஹானிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (10) பகல் பாங்கொக் நகரில் இடம்பெற்றது.

இருநாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்துவதற்கு இச்சந்திப்பு பெரும் உந்துசக்தியாகுமென்று கூறிய ஈரானிய ஜனாதிபதி விரைவில் ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஈரான் இலங்கைக்கு எண்ணெய் வழங்குவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பினை செய்வதுடன் எதிர்காலத்தில் அச் செயற்பாடுகள் மேலும் சீரடையும் என்று கூறிய ஈரான் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் இருநாடுகளுக்குமிடையில் இருதரப்பு கொள்வனவுகளை அதிகரிப்பதற்கு அச்சந்திப்பின் போது ஈரானிய ஜனாதிபதி யோசனை வெளியிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானும் இலங்கையும் உள்நாட்டு முரண்பாடுகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

இலங்கையின் உமாஓயா அபிவிருத்தித் திட்டத்துக்காக ஈரானிய அரசு வழங்கும் உதவிகள் தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளிலும் அபிவிருத்தித் துறையிலும் ஈரானும் இலங்கையும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டுடன் இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுமென கூறிய ஈரானிய ஜனாதிபதி இந்த மாநாடு இரண்டு நாடுகளுக்கும் மட்டுமன்றி ஆசிய வலயத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானதெனவும் கூறினார்.

அத்துடன் யுத்த வெற்றியின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்துவரும் நடவடிக்கைகளை ஈரானிய ஜனாதிபதி பாராட்டினார்.

ஜனாதிபதி மைத்ரிக்கு ஈரான் ஜனாதிபதி பராட்டு ! ஜனாதிபதி மைத்ரிக்கு ஈரான் ஜனாதிபதி பராட்டு ! Reviewed by Madawala News on 10/11/2016 06:32:00 AM Rating: 5