Ad Space Available here

யாழ்ப்பாணம் பள்ளிவாயல்கள் விடயத்தில் கவனமெடுக்க அமைச்சர் ஹலீம் நடவடிக்கை ...

யாழ்ப்பாணம் பள்ளிவாயல்கள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படும். அமைச்சர் ஹலீம் யாழில் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாயலில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளோடு கலந்துறையாடும்போது கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்கள் அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்.

முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் இது யாழ்ப்பாணத்திற்கான எனது முதலாவது விஜயம் யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேறிவருகின்றார்கள் முன்னரைப் போன்ற ஒரு செழிப்பான சூழல் இங்கே உருவாகவேண்டும் இப்போது யுத்தம் முடிவடைந்திருக்கின்றதுஇ ஒரு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலே இருக்கின்றது நீண்டகாலமாக முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் முஸ்லிமல்லாத அமைச்சர்களில் கீழ் இயங்கியது பள்ளிவாயல்களைப் பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன முஸ்லிம்களுடைய சமய விவகாரங்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த காலம் இப்போது முடிந்துவிட்டது; நாம் ஒரு புது யுகத்திலே காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். எங்களுடைய தலைவர் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமிசிங்கா அவர்களும் முஸ்லிம்களுடைய விடயங்களிலே நீதியை நிலைநாட்டுகின்றார்இ இது ஒரு சாதகமான நிலைமையாகும்மிந இந்த நல்ல நிலைமையை நாம் பேண விரும்புகின்றோம்.

முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களிலே வக்பு சபையிலே பல்வேறு பிரச்சினைகள் முன்வைப்பட்டுகின்றனஇ நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் பள்ளிவாயல்கள் சார்ந்து பிரச்சினைகள் இருக்கின்றன உதாரணமாக கொழும்பு சம்மாங்கோட்டைப் பள்ளிக்கு சொந்தமான எத்தனையோ கடைகள் இன்று முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்ற பிரச்சினை எமக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது அதே போன்று யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற பள்ளிவாயல்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றை நாம் நிச்சயம் கருத்தில் எடுப்போம் அவற்றை ஒழுங்கமைப்பது எமது கடமையாகும்.

யாழ்ப்பாணம் பள்ளிவாயல் நிர்வாகங்களில் வெளி மாவட்டங்களில் வசிக்கின்ற யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இங்கே ஒரு பெரியவர் குறிப்பிட்டார்இ அந்த நிலை உண்மையானதுதான்இ அவர்களை முற்றாக ஒதுக்கிவிட்டு நிர்வாகங்களை நடாத்த முடியாதுஇ ஆனால் ஊரிலே மீள்குடியேறியிருக்கின்றவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்இ பள்ளிவாயல்களை சூழ இருக்கின்றவர்கள் ஊர் ஜமா அத்தினராக பதிவு செய்யப்பட்டு அவர்களில் இருந்து நிர்வாகங்கள் தெரிவு இடம்பெறவேண்டும் இதனை நாம் சிராக மேற்கொள்ள விரும்புகின்றோம்.

அதேபோன்று வக்பு சொத்து விடயங்களிலும் பல்வேறு குழறுபடிகள் இருப்பதும் அறியப்பட்டிருக்கின்றது. இவற்றை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இயக்கங்கள் குழுக்களாக நாம் பிரிந்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது உலமாக்களால அங்கீகரிக்கப்பட்ட இயக்கங்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது இயக்கங்களை அடிப்படையாக வைத்து பள்ளிவாயல்களைப் பிரித்துவிடாதீர்கள்இ பள்ளிவாயல்கள் எல்லா முஸ்லிம்களுக்கும் உரிய பொதுச் சொத்தாகும்.

அதேபோன்று அல்-குர் ஆன் மதராஸாக்களை ஒழுங்கமைக்கும் திட்டமொன்றினையும் நாம் முன்னெடுக்கின்றோம். அண்மையில் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலே அங்கே நடைமுறையில் இருக்கும் இமாம்கள்இ கதீப்மார்கள்இ மு அத்தின்களுக்கான இஸ்லாமிய காப்புறுதித் திட்டம் என்னை வெகுவாக கவர்ந்ததுஇ அதனை இலங்கை நடைமுறைப்படுத்த நாம் முயற்சிக்கின்றோம் ஒரு இமாமுக்கு மாதாந்தம் சிறிய தொகையை பள்ளி நிர்வாகங்கள் செலுத்த வேண்டும் அதன்மூலம் அவருக்கு பல நன்மைகள் கிடைக்கும் இது ஒரு சிறப்பான முறையாகும்.

என்னுடைய இந்த விஜயம் ஒரு சம்பிரதாய விஜயமே மிகவிரைவில் என்னுடைய அமைச்சின் முழு அதிகாரிகளோடும் நான் இங்கே வருவேன் நண்பன் அஸ்மின் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய விடயங்களிலே அக்கறையோடு செயற்படுகின்ற ஒருவர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயங்கள் பலவற்றை அவர் நீண்டகாலமாக எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார் அவருடைய தொடர்ச்சியான அழைப்பையேற்று இன்று இங்கே வந்தேன் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு முழுமையான விஜயம் மேற்கொண்டு உங்களுடைய பிரச்சினைகளை அறிவதற்கும் தீர்ப்பதற்கும் நான் முயற்சிக்கின்றேன். அனைவருக்கும் நன்றி வஸ்ஸலாம்.

2016 ஒக்டோபர் 15ம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரியின் 200வது ஆண்டு விழா நிறைவையொட்டி தபாலுறை வெளியீட்டு நிகழ்வின் அதிதியாக கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் வருகை தந்த முஸ்லிம் விவகார மற்றும் அஞ்சல் துறை அமைச்சர் கௌரவ ஏ.எச்.எம்.ஹலீம் அவர்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுடைய அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசத்திற்கு குறுகிய நேரவிஜயமொன்றினை மேற்கொண்டு பள்ளிவாயல் நிர்வாகிகளோடும் உலமாக்கலுடனும் கலந்துறையாடினார்.

 

தகவல் எம்.எல்.லாபிர்

யாழ்ப்பாணம் பள்ளிவாயல்கள் விடயத்தில் கவனமெடுக்க அமைச்சர் ஹலீம் நடவடிக்கை ... யாழ்ப்பாணம் பள்ளிவாயல்கள் விடயத்தில் கவனமெடுக்க அமைச்சர் ஹலீம் நடவடிக்கை ... Reviewed by Madawala News on 10/17/2016 07:36:00 AM Rating: 5