Yahya

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ..


-முஜா அஷ்ரப்-
சோமாலியா நீண்ட வரலாற்றுப் பின்னனியையும் கடல்சார் வர்த்தகம், பாதுகாப்பு போண்றவற்றின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான ஏடன் வளைகுடாவையும் தன்னகத்தே கொண்ட நாடு.

ஆபிரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் ஏடன் வளைகுடா பாதையில் தமது ஆதிக்கத்தை நிறுவுவதற்கும்  மேற்கொள்ளப்பட்ட பனிப்போரினால் அதிகார வர்க்கத்தின் பூகோள ரீதியான நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு நிலயான ஆட்சியின்மை, அடிக்கடி ஏற்படும் கிளர்ச்சிகள், ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள், தொடர்தேர்ச்சியான உள்நாட்டு மோதல்களினால் மொத்ததேசிய உற்பத்தியில் பாரியளவான வீழ்ச்சி, ஏற்றுமதி பாதிப்பு, வெளிநாட்டு முதலீடுகளின் வருகையின்மை போண்றவற்றால்  கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த சோமாலியா பசி, பட்டினி, பஞ்சமன பல லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்து ஏகாதிபத்தியத்திய சுரண்டலின் மையப்புள்ளியாக மாறிப்போணது.

அதனொரு அங்கமான பிரான்ஸின் கவனமோ சோமாலிய கடற்பரப்பின் மீது நிலைகொண்டது அதற்கு காரணமும் இல்லாமலில்லை உலக நாடுகளின் அணு உலை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை சேகரித்து அழிக்கும் பொருப்பினை பிரான்ஸ் நிறுவனங்களே பொருப்பெடுத்திருந்தன அவ்வாறு சேகரித்த அணுக்கழிவுகளை அழிப்பதற்கு தகுந்த சூழ்நிலைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ் சோமாலியாவின் ஸ்திரமற்ற ஆட்சியின் தனக்கு சாதகமாக பயண்படுத்தி ஒப்பந்தம் ஒன்றை கைசாத்திட்டது 

அதன் சாராம்சம் என்னவனில் அணு உலை நிறுவனங்களிலிருந்து வருகின்ற லாபத்தில் குறிப்பிட்ட சிறு தொகையினை கொடுத்து விட்டு தன்னுடைய நிறுவனங்களினால் சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான டண் அணுக்கழிவுகளை சோமாலிய கடற்பரப்பில் கொட்டுவதாகும் 

இதன்விளைவு படிப்படியாக அங்குள்ள மீன் வளங்கள் எல்லாம் அழிந்து போக மீன்பிடியினை நம்பி வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு நோய்களுக்குட்பட்டு செத்து மடியலாயினர் இப்படி பசியாலும் பட்டினியாலும் மெல்ல மெல்ல மடிந்து கொண்டிருக்கும் தமது சமூகத்தின் நிலை கண்ட சோமாலிய இளைஞர்கள் ஒரு முடிவுக்கு வரலாயினர். தமது கடல்வளம் France சால் அழிவுக்குட்பட்டுவரும் பாதக செயலினை உலகுக்கு வெளிக்கொண்டு வரும் முகமாகவும்  கரையோரங்களில் வாழும் தமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கோடும் உருவாக்கப்பட்ட குழுக்களே கடற் கொள்ளயர்கள். 

இந்த அதிரடி நடவெடிக்கையினால் ஏடன் வளைகுடா பாதையிலே நகர்ந்து செல்லும் எண்ணை தாங்கி கப்பல்களும் வர்த்தக கப்பல்களும் இவர்கள் வசமாயின. இவ்வாறு அகப்பட்ட கப்பலையும், கப்பலில் இருந்தவர்களையும் கப்பம் செலுத்தி விடுவிக்கப்படும் காலம் வரை உணவு, தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு தமது கடற்கரையோரங்களை அண்டிய பகுதிகளில் நங்கூறமிடப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இதன் மூலம் தம்மிடம் பிடிபட்ட கப்பலுக்கு உரிமை கோரும் நிறுவனங்கள், நாடுகளிடம் பேரம்பேசப்பட்டு கப்பமாக பெறப்பட்ட பல மில்லியன் கணக்கான டொலர்கள் புலக்கத்துக்கு வந்ததன் பயணாக கடற்கரையோரங்களை அண்டிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொண்டனர்

காலப்போக்கில் பணத்தின் மீது கொண்ட மோகத்தால்  இதுவரை ஒற்றுமையாக செயற்பட்டவர்கள் பல குழுக்களாக பிரிய கடற் கொள்ளயர்கள் சம்மந்தமான அச்சம் பரவலான முறையில் உலக media களினது கவனத்தை பெறத்தொடங்கியது இதனால் ஏடன் வளைகுடா பாதையங்கும் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் பல நாடுகளின் யுத்த கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன

மீண்டும் பழய முயற்சியுடன் பல குழுக்களாக களம் இறங்கிய கடற் கொள்ளயர்களால் பலமான கடற் படை கட்டமைப்போடு எதிர்த்து நின்று போறிட முடியவில்லை பல மைல்களுக்கு அப்பால் உள்ள படகுகளும் கடற்படையின் அதிநவீன றேடார்களின் கழுகுப்பார்வைக்கு முன் தப்பமுடியாமல் மன்டியிட்டு சரண்டைந்தன 

சமூக நல நோக்கத்தில் சுயலாபம் குடிகொண்டதன் விளைவு கடற்கொள்ளையர்கள் அழிக்கப்பட்டுவிட்டனர் ஆனால் கடலிலே கொள்ளைகளை மேற்கொள்ளும் ஏகாபத்திய நரிகள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் .. சோமாலிய கடற்கொள்ளையர்கள் .. Reviewed by Madawala News on 10/12/2016 06:44:00 PM Rating: 5