Kidny

Kidny

சிந்து நதியினை இந்தியாவால் தடைசெய்ய முடியுமா..??-Muja Ashraff-

உலக நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளபட்ட நதிநீர் பங்கீட்டுத்திட்டங்களில் இன்றுவரை வெற்றிகரமான முறையில் அமுல்படுத்தப்படும் நதிநீர் பங்கீட்டுத்திட்டங்களில் முதன்மையானது சிந்து நதிநீர் திட்டம் என்றால் மிகையாகாது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையே இடம்பெற்ற யுத்தங்கள், கசப்பான நிகழ்வுகளின் பின் உள்ள நிலமைகளில் கூட நதிநீர் தொடர்பான விடயங்களில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பாக நிதானமாக நடந்துகொண்டன இருந்தும் சமீபத்தில் காஷ்மீரின் உரிப்பகுதியில் உள்ள டோக்ரா றாணுவ தலமையகம் மீதான தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தானை குறிவைக்கும் இந்தியா அதற்கு பழிவாங்கும் முகமாக சிந்து நதி மீதான ஒப்பந்தத்தை மீள்பரிசீலனைகள் என்ற போர்வையில் தன்னிச்சையாக  முறித்துக்கொள்ளும் நடவெடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சரி விடயத்துக்கு வருவோம்.

சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளான இமயமலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்து நதி இந்தியா வழியாக கடந்து பாகிஸ்தானில் முடிவடைகிறது 1960 களில் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் அப்போதைய இந்திய பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் அதிபரான அயூப்கானுக்கும் இடையில் சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த நதியில் வரும் நீரில் 80 வீதமானதை பாகிஸ்தானும் 20 வீதமானதை இந்தியாவும் பயண்படுத்துவதாக முடிவுகள் எட்டப்பட்டன.

இந்தியாவின் வழியாக செல்லும் சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், சட்லஜ், ராவி, பீஸ், பாகிஸ்தானின் பல பகுதிகளை ஊடறுத்துச்சென்று இந்து நதியில் மீண்டும் சங்கமமாகின்றது ஒப்பந்தப்படி பாகிஸ்தான் இந்து, செனாப், ஜீலம் நதிகளின் உரிமைகளை பெற்றுக்கொண்டதோடு அந்த நீரில் போக்குவரத்து பாசணம் போன்றவற்றுக்கு இந்தியா சிறிதளவை பயண்படுத்திக்கொள்ளலாம் என்றும் ராவி, சத்லஜ், பீஸ் ஆகியவற்றின் உரிமைகள் இந்தியாவுக்கும் என முடிவு செய்யப்பட்டது

இந்தியா தனக்குரிய சதவீதத்துக்கும் மேலதிகமாக நீரை பயண்படுத்திக்கொண்டதையும் அது தொடர்பான தகவல்களையும் திட்டமிட்டு மறைத்தும் வந்துள்ளதையும் பாகிஸ்தான் சர்வதேச தீர்பாயத்தை நாடி முறையிட்டுள்ளதையும் நினைவுகூறலாம்

பாகிஸ்தானை தனிமைபடுத்தும் திட்டங்களின் பின்னனியில் 56 வருடங்கள் பழமைவாய்ந்ததும், மிகமுக்கியமாக கருதப்படும் இத்திட்டத்தை சிதைக்கும் முகமாக இந்தியா தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள காஷ்மீர் வழியாக ஓடும் இந்து நதியின் குறுக்காக அனைகட்டும் நடவெடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு அதன் கிளை நதியான செனாபின் குறுக்கே பக்குள்தல், ஸ்வால்காட், பர்சார் ஆகிய இடங்களிலும் தடுப்பணை கட்டும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளமையானது  இருநாடுகளுக்கிடையிலான உறவுகளில் பாரியளவான விரிசல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை

இருந்தும் தற்போதைய நிலையில் நீரை திசைத்திருப்பவதற்கோ தடுத்து வைப்பவதற்கோ பாரியளவான அணைகளையோ தொழிநுட்பத்தையோ இந்தியா பெற்றிருக்கவில்லை என்று நீரியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

சிந்து நதி மீதான நீர் வினியோகம் தடைப்படுமானால் இந்தியாவுக்கான நதிநீர் பாதைகள் அனைத்தும் தடைசெய்யப்படுமன்ற சீனாவின் மறைமுக எச்சரிக்கையும் எதிர்காலத்தில் இயற்கைக்கு மாற்றமாக நீரை திசைதிருப்புவதன் மூலம் வெள்ளப்பெருக்குகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய சிக்கல்களும்
உலக நாடுகளுக்கிடையே தனிமைப்படுத்தப்படும் அபாயங்களும் இது தொடர்பான விடயங்களில் இந்தியாவை மௌனம் கொள்ள வைத்திருக்கின்றது.
சிந்து நதியினை இந்தியாவால் தடைசெய்ய முடியுமா..?? சிந்து நதியினை இந்தியாவால் தடைசெய்ய முடியுமா..?? Reviewed by Madawala News on 10/22/2016 02:39:00 PM Rating: 5