வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களுக்காக முஸ்லிம் கலாசார அமைச்சில் கோரிய நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை ; எஸ் எம் மரிக்கார் விசனம் ...



கொலன்னாவை வெள்ளம்பிட்டி உற்பட கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சு இதுவரை நிதி உதவி வழங்கவில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குற்றம் சுமத்தினார்.

நேற்று மெகட கொலன்னாவை மஸ்ஜிதுல் நூரானியா ஜும்மா பள்ளிவாயலுக்கு கட்டட மூலப்பெருற்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்..

கொலன்னாவை வெள்ளம்பிட்டி உற்பட கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 36 விகாரைகள் 16 பள்ளீவாயல்கள் 4 இந்து கோவில்கள் சேதமடைந்தன. 

இதில் விகாரைகளுக்காக புத்தசாசன அமைச்சின் ஊடாகவும் இந்து கோவில்களுக்கு இந்து கலாசார அமைச்சின் ஊடாகவும் நான் நிதி உதவியை பெற்றுக்கொடுத்தேன்.அந்த அமைச்சுகளுக்கு கோரிக்கை முன்வைத்து ஓரிரு வாரங்களுக்குள் எமக்கான நிதியை அவர்கள் ஏற்பாடு செய்து தந்தார்கள் ஆனால் முஸ்லீம் கலாசார அமைச்சில் சேதமடைந்த  ஒரு பள்ளி வாயலுக்கு ஒரு லட்சம் வீதம் நாம் நிதி உதவி கோரி ஆறு மாதங்களாகியும் அதனை பெற்றுக்கொடுக்க அவர்களுக்கு முடியாமல் போயுள்ளது.

முஸ்லிம் கலாசார அமைச்சின் இந்த நடவடிக்கை நான் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களின் இந்த பொடுபோக்கான நடவடிக்கை தொடர்பில் கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கொலன்னாவை அமைப்பாளர் ஒரு முஸ்லீம் என்ற வகையில் இந்த பள்ளிவாயல்களுக்கு  நிதி உதவியை பெற்றுக்கொடுக்க முடியாத்தை இட்டு அதிருப்தி அடைவதாக குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் நாம் முஸ்லிம் கலாசார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது ...

இலங்கையில் உள்ள 2000 க்கும் அதிகமான பள்ளிவாயல்களுக்கும் 15 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் நாம் அந்த நிதியில் 7.5 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்து கொலன்னாவை பிரதேச செயலாளர் காரியாளயத்துக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் அந்த பள்ளிவாயல்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் MCF நிதியில் இருந்து நாம் கொலன்னாவ பள்ளிவாயல்களுக்கென 1 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். வகுப் சபையில் கடந்த 30 வருடங்களாக கனக்காய்வு செய்யப்படவில்லை என்பதால் நாம் தற்போது அந்த கணக்காய்வை செய்துகொண்டுள்ளோம் அதன் காரணமாக   அப்பளிவாயல்களுக்கு அந்த நிதியை 
பெற்றுகொடுப்பதில் சிறு காலதாமதம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

அனர்தங்கள் ஏற்படும் போது அனர்த்த முகாமைதுவ அமைச்சு செயற்படுவதை போல முஸ்லிம் கலாசார அமைச்சு செயற்படுவதற்கான  சட்ட சலுகைகள் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களுக்காக முஸ்லிம் கலாசார அமைச்சில் கோரிய நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை ; எஸ் எம் மரிக்கார் விசனம் ... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்களுக்காக முஸ்லிம் கலாசார அமைச்சில் கோரிய நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை ; எஸ் எம் மரிக்கார் விசனம் ... Reviewed by Madawala News on 10/22/2016 09:50:00 AM Rating: 5