Oceas

அமைச்சர் பௌசி விவகாரமே லஞ்சம், ஊழல் மோசடி திணைக்களம் மீதான ஜனாதிபதியின் அதிருப்திக்கு காரணம்

(எம்.சி.நஜி­முதீன்)

இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெள­ஸியை நீதிமன்றில் அஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­த­போது உரிய மரபு பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. அத­னா­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு மீது அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­தாக

 அமைச்சர்   எஸ்.பி.திஸா­நா­யக்க    தெரி­வித்தார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­ச­ரிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு தொடர்பில் வெளி­யிட்ட கருத்து தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­து­வ­தானால் அதற்­கென மர­பொன்­றுள்­ளது. அதனைப் பின்­பற்­ற­வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்ளை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த முன்னர் அது­தொ­டர்பில் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­ய­க­ருக்கும் தெரி­யப்­ப­டுத்­த­வேண்டும். 

எனினும் அந்­ந­ட­வ­டிக்கை பின்­பற்­றப்­ப­டாமல் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெள­ஸியை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  எனவே அது தவ­றான அணு­கு­மு­றை­யாகும். அந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது அரச தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­ப­தியை நெருக்­க­டிக்கு உள்­ளாக்கும் விட­ய­மாகும்.

மேலும் இரா­ஜாங்க அமைச்சர் பெளஸி மீது முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டா­னது பார­தூ­ர­மா­ன­தல்ல. ஏனெனில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற ரீதியில் அவர் அமைச்சு வாக­னங்­களை பயன்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை. மேலும் ஏனைய அமைச்­சர்­களும் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சு வாக­னங்­க­ளையே பயன்­ப­டுத்­து­கின்­றனர். 

எனவே இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு இராஜாங்க அமைச்சர் பெளஸியின் விடயத்தில் மேற்கொண்ட முன்னெடுப்புகள் மிகவும் பாரதூரமானவையாகும். ஆகையினால்தான் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்பில அதிருப்தி வெளியிட்டுள்ளார் என்றார். 

அமைச்சர் பௌசி விவகாரமே லஞ்சம், ஊழல் மோசடி திணைக்களம் மீதான ஜனாதிபதியின் அதிருப்திக்கு காரணம் அமைச்சர் பௌசி விவகாரமே லஞ்சம், ஊழல் மோசடி திணைக்களம் மீதான ஜனாதிபதியின் அதிருப்திக்கு காரணம் Reviewed by Madawala News on 10/15/2016 10:41:00 AM Rating: 5