Kidny

Kidny

தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு தனிப்­பி­ராந்­தியம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்..தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு தனிப்­பி­ராந்­தியம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என தெரிவித்­துள்ள எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், இது தமிழ்,முஸ்லிம் முத­ல­மைச்சர் தொடர்­பான விடயம் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்­டக்­க­ளப்பு மகா­ஜ­னக்­கல்­லூ­ரியில் நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை மாலை நடை­பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்­கிய விழாவின் இறுதி நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்,

நாங்கள் எமது கலை கலா­சாரம் பண்­பாடு பாரம்­ப­ரியம் என்­ப­வற்­றோடு இணைந்­துதான் வாழ்ந்­து­வ­ரு­கின்றோம். எமது தமிழ்த் தேசிய இனம் பல்­லா­யிரம் ஆண்­டு­க­ளாக ஒரு தனித்­து­வ­மான இன­மாக வாழ்ந்­தது மாத்­தி­ர­மல்ல அவர்­க­ளது கலை கலா­சா­ரத்­தையும் வளர்த்து வந்­தி­ருக்­கின்­றார்கள். 

மட்­டக்­க­ளப்பு என்­பது நாட்டின் ஒரு முக்­கி­ய­மான மாவட்­ட­மாகும். யாழ்ப்­பாண மாவட்­டத்­திற்கு அடுத்­த­தாக தமிழ் மக்கள் கூடு­த­லான அளவில் வாழ்­கின்ற மாவட்­ட­மாகும். கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­க­ளிலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றார்கள். 

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த பின்னர் வேறு மாகா­ணங்­க­ளிலும் பார்க்க கூடு­த­லான அளவு கிழக்கு மாகா­ணத்தில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் குடி­யேற்றம் நடை­பெற்­றி­ருக்­கின்­றது. குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்­திலும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் குடி­யேற்­றங்கள் கூடு­த­லா­ன­ளவில் இடம்­பெற்­றன. 

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த 1947ஆம் ஆண்டு காலம் தொடங்கி 1981ஆம் ஆண்டு வரை வெளியி­டப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­களின் அடிப்­ப­டையில் இந்த நாட்டில் பெரும்­பான்­மை­யி­னத்­த­வரின் தொகை 238வீதத்தால் அதி­க­ரித்­தது.அதா­வது இரண்­டரை வீதத்­தினால் அதி­க­ரித்­தது. அதே காலப்­ப­கு­தியில் கிழக்கு மாகா­ணத்தில் வாழ்ந்த பெரும்­பான்­மை­யி­னத்­த­வரின் தொகை 875வீதத்தால் அதி­க­ரித்­தது. இது ஏறத்­தாள ஒன்­பது வீதம்.

வட­கி­ழக்கு இணைப்­பி­னைப்­பற்றி நாங்­கள்­பே­சி­வ­ரு­கின்றோம். தந்தை செல்­வ­நா­யகம் அவர்கள் பிர­த­ம­ருடன் 67ஆம் ஆண்டு பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­கா­வுடன் ஒப்­பந்தம் ஒன்றை செய்­து­கொண்டார்.வடக்கு ஒரு பிராந்­தி­ய­மாக இருக்கும் என்றும் கிழக்கில் இரண்டு அதற்கு மேற்­பட்ட பிராந்­தி­யங்கள் இருக்கும் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது.பெரும்­பான்­மை­யாக தமி­ழர்கள் வாழும் திரு­கோ­ண­ம­லையும் மட்­டக்­க­ளப்பும் ஒரு பிராந்­தியம்.பட்­டி­ருப்­புக்கு தொகு­திக்கு தென்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் அதி­க­மா­க­வாழும் பகுதி ஒரு பிராந்­தி­ய­மா­கவும் சிங்­கள மக்கள் அதி­கவில் குடி­யேற்­றப்­பட்ட அம்­பாறை பிர­தேசம் இன்­னு­மொரு பிராந்­தி­ய­மா­கவும் இருப்­ப­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அந்த ஒப்­பந்­தத்தில் மாகாண எல்­லை­க­ளுக்கு அப்பால் பிராந்­தி­யங்கள் இணை­யலாம் என்ற மிக முக்­கி­ய­மான விடயம் கூறப்­பட்­டுள்­ளது.திரு­கோ­ண­ம­லையும் மட்­டக்­க­ளப்பும் வட­மா­கா­ணத்­துடன் இணைந்­தி­ருக்­கலாம்.முஸ்லிம் மக்கள் பெரும்­பா­லா­க­வுள்ள பிராந்­தி­யமும் விரும்­பினால் இணைந்­து­கொள்­ளலாம்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே 1987ஆம் ஆண்டு இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு ஒரு பிராந்­தி­ய­மாக அர­சியல் அதி­காரம் பகிர்ந்து தரப்­ப­டு­மென கூறப்­பட்­டது. அது உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­பினால் தற்­போது அற்­றுப்­போ­யி­ருக்­கின்­றது. அந்தத் தீர்ப்­பினை ஒரு நியா­ய­மான தீர்ப்­பாக நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­வி­தத்தில் தவறு இருப்­ப­தாக கூறி வடக்கு கிழக்கு துண்­டிக்­கப்­பட்­டது. 

நாம் என் தனி பிராந்தியம் கோருகின்றோம்  நாங்கள் ஏன் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு இந்த நாட்டில் ஒரு தனிப்­பி­ராந்­தியம் இருக்க வேண்டும் என்று கேட்­கின்றோம்? 

விவ­சாயக் குடி­யேற்­றத்தின் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில் பெரும்­பான்­மை­யினம் ஒன்­று­கூடி வளர்ந்­தி­ருக்­கின்­றது. பல்­வேறு துறை­களில் இதற்குப் பின்­னரும் கிழக்கு மாகா­ணத்தில் பெரும்­பான்­மை­யி­னரின் குடி­யேற்­றங்கள் நடை­பெ­றலாம். அப்­படி நடை­பெற்றால் நாங்கள் மேலும் பாதிக்­கப்­ப­டுவோம். அப்­பா­திப்­பு­களை தடுக்க வேண்­டு­மானால் வடக்கு கிழக்கு இணைந்து ஒரு தமிழ் பேசும் பிராந்­தியம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதை நாங்கள் எங்கள் கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்­ளலாம். 

எங்­க­ளு­டைய மொழி, கலை கலா­சா­ரங்கள் பாரம்­ப­ரி­யங்­களை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு இது அத்­தி­யா­வ­சிய தேவை­யாகும். இது முத­ல­மைச்­ச­ரோடு சார்ந்த விட­ய­மல்ல. தமிழர் முத­ல­மைச்­சரா அல்­லது முஸ்லிம் முத­ல­மைச்­சரா என்ற கேள்வி இல்லை.தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நிரந்­த­ர­மாக இந்த நாட்டில் ஒரு தனிப்­பி­ராந்­தியம் இருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­களின் உரி­மை­களை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­டு­வது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

இதன்­மூ­ல­மாக எவ­ருக்கும் எந்த அநீ­தி­யையும் வழங்க நினைக்­க­வில்லை.எங்­க­ளோடு வாழ்­கின்ற முஸ்லிம் மக்­களும் பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் திருப்­தி­ய­டைந்து வாழ­வேண்டும். அவர்­க­ளுக்கு நாங்கள் அநீதி இழைக்க முடி­யாது. அவர்­க­ளுக்கு நாங்கள் அநீதி இழைக்­க­மாட்டோம்.அவர்­க­ளது உரி­மை­களும் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். அவர்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்கு என்­னென்ன செய்ய வேண்­டுமோ அவற்றை செய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். நாங்கள் கவ­னத்தில் எடுக்க வேண்­டிய முக்­கி­ய­மான விட­யங்­களை கவ­னத்தில் கொண்டு நீண்ட காலம் நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒழுங்­கு­களின் மூல­மாக தீர்­வு­களை பெற வேண்டும். அது ஒரு­வரை ஒருவர் ஏமாற்றிப் பெறு­வது அல்ல. நாம் ஒன்­றி­ணைந்து புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு அதனை பெற்­றுக்­கொள்ள வேண்டும். 

முக்கிய காலகட்டத்தில் நாம்

இன்று நாங்கள் மிக முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் உள்ளோம்.இந்த நாட்டில் முதன்­மு­றை­யாக சக இனங்­களின் சம்­ம­தத்­துடன் சக அர­சியற் கட்­சி­களின் பங்­க­ளிப்­புடன் அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற நிலை தற்­போது இருக்­கின்­றது. 

ஏற்­க­னவே இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் சாச­னங்கள் ஒரு கட்­சியால் உரு­வாக்­கப்­பட்­டவை. அக்­கட்­சியின் தேவைக்­காக தனித்து உரு­வாக்­கப்­பட்­ட­வை­யாகும். ஏனைய கட்­சிகள் அவ் அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வதில் பங்கு கொள்­ள­வில்லை. தமிழர் தரப்பு கலந்­து­கொள்­ள­வில்லை. தமிழ் மக்கள் அதனை புறக்­க­ணித்­தார்கள்.

எமது மக்கள் தங்­க­ளு­டைய இறை­மையை முழு­மை­யாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் மத்­தியில் கொடுக்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரத்தை பொறுத்­த­வ­ரையில் மத்­திய அர­சாங்­கத்­தி­னூ­டாக அந்த இறைமை பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஜனா­தி­பதி எங்­க­ளுக்கு மாகா­ணங்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கின்ற கரு­மங்­களின் அடிப்­ப­டையில் இறை­மையின் அடிப்­ப­டையில் அந்­தந்த மாகா­ணங்­களில் அதி­காரம் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

உள்­ளு­ராட்சி மன்­றங்­களை பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­களின் படி இறை­மையின் அடிப்­ப­டையில் அந்­தந்த உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்கு அளிக்­கப்­படும் அதி­கா­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். 

நாட்டில் வாழ்­கின்ற சகல மக்­க­ளு­டைய இறை­மையும் மதிக்­கப்­ப­ட­வேண்டும். ஆட்சி அதி­கா­ரங்கள் மத்­தி­யிலோ அல்­லது பிராந்­தி­யத்­திலோ அல்­லது உள்­ளு­ராட்சி மன்­றத்­திலோ எந்த கட்­டத்­தி­லி­ருந்­தாலும் எந்­த­வித தடை­க­ளு­மின்றி இறை­மையின் அடிப்­ப­டையில் வேறு எவரின் தலை­யீ­டு­களும் இல்­லாமல் மக்கள் அந்த அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த வேண்டும். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் சட்­டம்­ஒ­ழுங்கு, காணி, கல்வி, உயர்­கல்வி, பொரு­ளா­தாரம், விவ­சாயம், நீர்ப்­பா­சனம்,கடற்­தொழில்,கைத்­தொழில் போன்ற பல்­வேறு விட­யங்கள் மாகா­ணங்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும் என நாங்கள் கேட்­கின்றோம். இது நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியம் உள்­ளது. ஆன­ப­டியால் எல்­லோ­ரு­டைய சம்­ம­தத்­து­டனும் இது உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். 

ஒருமித்து செயற்பட வேண்டும்

தமிழ் மக்­களை பொறுத்­த­வரை நாங்கள் ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்­டிய தேவை இருக்­கின்­றது. பகி­ரங்­க­மான வாதாட்­டங்கள் தேவை­யில்லை. இந்த முயற்­சியை குழப்­பு­வ­தற்கு பல தீவி­ர­வாத சக்­திகள் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவர்­க­ளுக்கு நாங்கள் சந்­தர்ப்­பத்தை கொடுக்­கக்­கூ­டாது. 

எல்­லோரும் தங்கள் கருத்­து­களை கூறலாம். எடுக்­கப்­ப­டு­கின்ற முடி­வுகள் மக்­க­ளுக்கு முன் வைக்­கப்­ப­ட­வேண்டும். மக்கள் அறி­யாமல் எந்­த­வொரு முடி­வுக்கும் நாங்கள் வர­மாட்டோம். 

ஜனா­தி­பதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சார்ந்­தவர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை சார்ந்­தவர். அவர்­க­ளு­டைய கட்சி உறுப்­பி­னர்கள் அவ­ர­வ­ரோடு இருக்­கின்­றார்கள். ஏனைய பல கட்­சி­களும் சிறு­பான்மைக் கட்­சி­களும் இந்த இரண்டு கட்­சி­க­ளோடும் சேர்ந்து கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு நல்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

நாங்கள் இதற்கு முன்­ப­தாக பல சந்­தர்ப்­பங்­களை இழந்­தி­ருக்­கின்றோம். அதே தவறை நாங்கள் மீண்டும் செய்­யக்­கூ­டாது. சொற்­பி­ர­யோ­கங்­களில் அதிகம் தங்­கி­யி­ருக்­க­வில்லை.உலகின் பல்­வேறு நாடு­களில் பல்­வேறு ஆட்சி முறைகள் இருக்­கின்­றன. பல்­வேறு அர­சியல் சாச­னங்கள் இருக்­கின்­றன. 

எங்­க­ளு­டைய அயல் நாடான இந்­தியா சமஷ்டி முறையைக் கொண்ட ஒரு நாடு ஆனால் பல ஒற்­றை­யாட்சி ஒழுங்­குகள் அங்கு இருக்­கின்­றன என ஒரு சிலர் சொல்­கின்­றனர். ஆனால் இந்­தியா ஒற்­றை­யாட்சி ஒழுங்­கு­களை கொண்ட ஒரு நாடு என்றும் சமஷ்டி பொறி­மு­றைகள் சிலவும் அங்கு இருக்­கின்­றன என்று வேறு சிலர் சொல்­கின்­றனர். பெங்­கா­லியை பெங்­காலி ஒரு­வனும் கேர­ளாவை மலை­யாளி ஒரு­வனும் பஞ்­சா­பியை பஞ்­சாபி ஒரு­வனும் ஆந்­தி­ராவை தெலுங்கை சேர்ந்தவனும் தமிழ் நாட்டை தமி­ழனும் தான் ஆட்சி செய்­கின்றார்கள். ஆகையால் வட­கி­ழக்கை தமிழ் பேசும் மக்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். அதுவே முக்­கியம். அது நடைபெற வேண்டும். அது வெறும் சொற்பிரயோகங்களில் தங்கியிருக்கவில்லை. 

சட்டத்தின் அதிகாரத்தை பொறுத்தவரையில் நிர்வாகத்தின் அதிகாரத்தை பொறுத்தவரையில் நீதித்றையின் அதிகாரத்தை பொறுத்தவரையில் வெவ்வேறு கருமங்களை அதிகாரத்தை பொறுத்தவரையில் எந்தவிதமான ஒழுங்குஅரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படுகின்றது என்பதுதான் முக்கியமான கேள்வியாகும். 

எமது மக்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். அது உறுதியாகும்.நாங்கள் இந்தக் கருமத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டிருக்கின்றோம். பல விடயங்கள் எங்களுக்கு தொியும். ஆனால் வருகின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவவிடக்கூடாது. சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்தி ஒரு அரசியல் தீர்வை நாங்கள் காணவேண்டும். 

எமது மக்கள் தங்களுடைய இறைமையின் அடிப்படையில் நாளாந்த வாழ்வில் எதிர்நோக்குகின்ற பல விடயங்கள் சம்பந்தமாக தங்களுடைய அதிகாரத்தை முழுமையாகவும் எந்தவித தடைகளுமின்றியும் சுதந்திரமாகவும் பயன்படுத்துகின்ற நிலைமை இந்த நாட்டில் உருவாக வேண்டும். எமது மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். இதற்கு அவர்கள் பொறுப்பு கூறவேண்டும் என்றார்.-- 

தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு தனிப்­பி­ராந்­தியம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.. தமிழ் பேசும் மக்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டு­மானால் வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு தனிப்­பி­ராந்­தியம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.. Reviewed by Madawala News on 10/24/2016 09:26:00 AM Rating: 5