Free Space

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் விஷேட விபத்துப் பிரிவு ..


அபு அலா 
கல்வியும் தேவை, சுகாதாரமும் தேவை இவைகள் இரண்டும் ஒரு மனிதனுக்கு மிக முக்கிய பங்காக அமைகின்றது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அமைப்பது தொடர்பான மக்களுடனான சந்திப்பு இன்று காலை (15) மீனோடைக்கட்டில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

உங்களுக்கான சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் இருக்கின்றேன். இந்தத் தேவைகளை நீங்கள் என்னிடம் கேட்டுப் பெறவேண்டிய அவசியமே இல்லை. கேட்காமலேயே என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளலாம். நான் உங்களின் அமைச்சர் என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடவேண்டாம். இந்த அமைச்சர் பதிவி கிடைக்கக் காரணம் நீங்கள்தான் இது உங்களுகே உரித்துடையது.

நீங்கள் எனக்குத் தந்த ஆணையால்தான் நான் இன்று ஒரு சுகாதார அமைச்சர் என்ற ஒரு அதிகாரத்தில் இருந்து வருகின்றேன். இந்த அதிகாரத்தை வழங்கியவர்கள் நீங்களேயாகும். இதை நான் ஒருபோதும் மறந்தது செயற்பட்டது கிடையாது.

எனது மக்கள் சுகாதாரத் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக எங்கும் அழைந்து தெரியக்கூடாது என்பதற்காகவே அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை ஒரு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து அது நிறைவுபெற்றுள்ளது. அதுமாத்திரமல்லாமல் பல கோடி நிதியைக்கொண்டு வந்து அங்கு பாரிய கட்டிடத்ததையும் அமைப்பதற்கான வேலைகள் இடம்பெற்றவன்னம் உள்ளன.

அதுமாத்திரமல்லாமல் அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் விஷேட விபத்துப் பிரிவையும் அமைப்பதற்கான திட்டங்களை நான் வகுத்துள்ளேன். அந்த நடவடிககைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தை 1 கோடி நிதியில் அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதற்கான பணமும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.   

உங்களுக்கான தேவைகளை நிறைவு செய்து தருவதில் நான் மிக உன்னிப்பாக இருந்து வருகின்றேன். இதேபோல் இப்பிரதேசத்திலுள்ள கல்வி சம்பந்தமான விடயங்களிலும் நான் மிக கவனமாக இருந்துகொண்டு அதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் விஷேட விபத்துப் பிரிவு .. அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் விஷேட விபத்துப் பிரிவு .. Reviewed by Madawala News on 10/15/2016 02:02:00 PM Rating: 5