Free Space

இலங்கை முஸ்லீம்களை நோக்கி வரும் பாரிய ஆபத்து ! முஸ்லீம் தலைமைகள் இப்போதாவது ஒன்றுபடுமா ?


இலங்கை நாடு புதுயதொரு அரசியலமைப்பு மாற்றத்தை நோக்கிய பயணத்தின் இறுதித் தருவாயிலுள்ளது.இலங்கை முஸ்லிம்கள் வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துமளவு முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கக் கூடிய தேர்தல் முறை மாற்றம்,ஜனாதிபதி முறை மாற்றம் ஆகியவற்றில் சிறிதேனும் விழிப்புணர்வற்று இருக்கின்றனர்.இந் நிலை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

அரசியலமைப்பில் முஸ்லிம்களை பாதிக்கக்கூடிய ஒரு சிறிய மாற்றம் இடம்பெற்றாலும் அதனை மாற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.இதில் எமது முஸ்லிம் சமூகம் பூரண அக்கறையுடன் செயற்பட வேண்டும்.இன்று முஸ்லிம் சமூகம் மார்க்க ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் பல்வேறு குழுக்களாக பிரிந்து நிற்பதால் எமது விடயங்களை அரசின் முக்கிய பிரதானிகளிடம் கொண்டு சென்று சாதித்துக் கொள்வதில் மிகப் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

“இதனை நன்கு உணர்ந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் முஸ்லிம் கட்சிகள்,அரசியல் வாதிகள்,புத்தி ஜீவிகள் மற்றும் மார்க்க அறிஞர்களை உள்வாங்கிய தலைமைத்துவ சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மக்களிடையே விதைத்து வருகிறார்”

இது காலத்தின் தேவையும் கூட.இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை ஒரு குழு தனித்து நின்று சாதிக்குமளவு யாரிடமும் வலிமை இல்லை என்பதால் தலைமைத்துவ சபை ஒன்றின் தேவை உணரப்படுவதை மறுக்க முடியாது.

இதற்கு முன்பு முஸ்லிம் அரசியல் வாதிகளை ஒன்றிணைக்கும் பல முயற்சிகள் இடம்பெற்றாலும் அவைகள் ஒன்றும் சாத்தியப்படவில்லை.இது அரசியலுக்கு நோக்கங்களுக்கு அப்பால் சமூக நோக்கத்தை அடிப்படியாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் ஒன்றினையும் ஒன்றாகும்.முஸ்லிம் சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முகம் கொடுக்கும் போது அல்லாஹ்வின் உதவியை நாம் எம் பக்கம் பெற்றுக்கொள்ள முடியும்.அனைவரும் ஒன்றிணைத்து செயற்படும் போது எமது கோரிக்கைகளை நிராகரித்து யாராலும் நடை பயில முடியாது.

முஸ்லிம் சமூகமே!
சமூகத்திற்காய் ஒன்றுபடு.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
இலங்கை முஸ்லீம்களை நோக்கி வரும் பாரிய ஆபத்து ! முஸ்லீம் தலைமைகள் இப்போதாவது ஒன்றுபடுமா ? இலங்கை முஸ்லீம்களை நோக்கி வரும் பாரிய ஆபத்து ! முஸ்லீம் தலைமைகள் இப்போதாவது ஒன்றுபடுமா ? Reviewed by Madawala News on 10/12/2016 06:45:00 PM Rating: 5