Accaddemy

திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வை புறக்கணித்த ராஜாங்க அமைச்சர் !

நல்லாட்சி அரசின் அமைச்சர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ராஜாங்க அமைச்சரிடயேயான இன்னொரு மனக்கசப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

அவிசாவளை பிரதேத்தில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள ராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அங்கு அவருக்கு உரைநிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்து  அந்த நிகழ்வை புறக்கணிப்பு செய்வதாக அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவிதுள்ள்ளார்.

சுதந்திர கட்சி அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க ரன்ஞித் சியம்பலா பிடிய ஆகியோருக்கு இந்த நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரான தனக்கு வாய்ப்பு வழங்காமை காரணமாக தான் இந்த நிகழ்வை புறக்கணிப்பு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் புறக்கணிப்பு செய்யப்பட்ட ஆறாவது தடவை இதுவாகும் என அவர் மேலும் கூறியுள்ள அவர் தொடர்ந்து பொறுமை காக்கா முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வந்து அமைச்சரானவர்  மகிந்த சமரசிங்க என்பதும் பாலித ரங்கே பண்டார புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வை புறக்கணித்த ராஜாங்க அமைச்சர் ! திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வை புறக்கணித்த ராஜாங்க அமைச்சர் ! Reviewed by Madawala News on 10/15/2016 11:50:00 AM Rating: 5