Free Space

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை...


இலங்கையின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்..

நாங்கள் கடும் அர்பணிப்புகளுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். ஆனால் இந்த அரசு அரசியல் அமைப்பு என்ற பெயரில் நாட்டை பிரிக்க உத்தேசித்துள்ளது.நாம் அதற்கு இடமளிக்க போவதில்லை.

வடக்கில் பொலிஸில் சேவையாற்றும் தமிழர்களை பதவி விளகுமாறு பிரபாகரன் படை என்ற குழு கடிதம் அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது. இது இரு பயங்கரமான நிலை.இன்னும் எத்தனை தினங்களுக்கு யாழுக்கு செல்லமுடியுமான இந்நிலை இருக்குமோ என எம்மால் உத்தரவாதம் வழங்கமுடியாமல் உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை... தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை... Reviewed by Madawala News on 10/31/2016 09:13:00 AM Rating: 5