அடுத்தது நீங்கள் தான் ! தயாராக இருங்கள் ...

நிதி மோசடிப்பிரிவினரால் அடுத்து கைது செய்யப்படப்போவது விமல் வீரவன்சவே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எம்மை சிறையில் அடைப்பார்கள் எமது பிள்ளைகளை சிறையில் அடைப்பார்கள். அதனை கண்டு கொள்ள வேண்டியதில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் விமல் வீரவன்ச பைகளை எடுத்துக் கொண்டு ஆயத்தமாகுங்கள். அடுத்து நீங்களே சிறைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனினும் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லையுண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்தது நீங்கள் தான் ! தயாராக இருங்கள் ... அடுத்தது நீங்கள் தான் ! தயாராக இருங்கள் ... Reviewed by Madawala News on 10/03/2016 03:43:00 PM Rating: 5