Ad Space avaiable

நாளை சமர்பிக்கப்படவுள்ள கோப் அறிக்கையில் அர்ஜுன் மஹேந்திரனுக்கு கேஸ் பாரம் !



நாளை பாராளுமன்றுக்கு சமர்பிக்கப்படவுள்ள மத்திய வங்கி தொடர்பான COPE அறிக்கையில் மத்திய வாங்கி முறிகள் விற்பனையில் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான இந்த தெரிவுக்குழுவின் குறித்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை எனவும் அவர் வேறு ஒன்று அல்லது அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015 – 2016 ஆண்டு இடம்பெற்ற மத்திய வாங்கி முறிகள் விற்பனையில் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும், எனவே குறித்த பரிமாற்றத்துடன் தொடர்புடைய அவருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோப் குழு அறிக்கை பரிந்துரை செய்வதாக தலவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் முறிகள் தொடர்பில் கோப் குழு மேற்கொண்டுள்ள விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதனை தாமதப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் குறிப்பிட்டிருந்த அதேவேளை மத்திய வங்கி உள்ளக விசாரனைகளில் 1100 கோடி மோசடி இடம்பெற்றுள்ளது தெரிவந்துள்ளதாக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க குறிப்பிட்டிந்தார்.



 

நாளை சமர்பிக்கப்படவுள்ள கோப் அறிக்கையில் அர்ஜுன் மஹேந்திரனுக்கு கேஸ் பாரம் ! நாளை சமர்பிக்கப்படவுள்ள கோப் அறிக்கையில் அர்ஜுன் மஹேந்திரனுக்கு கேஸ் பாரம் ! Reviewed by Madawala News on 10/24/2016 06:33:00 PM Rating: 5