Oceas

கடும் முடிவுகள் எடுக்க பின் நிற்கப் போவதில்லை


லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பிரிவு FCID , CID ஆகியவை அரசியல் உள்நோக்கங்களுக்காக செயற்படுவதாக இருந்தால் அது தொடர்பில் மிகவும் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டிவரும் என ஜனாதிபதி மைத்ரிப்பால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அவர் தலைமையில் இடம்பெற்றுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனான முக்கிய கலந்துரையாடலில்  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பிரிவு FCID , CID ஆகியவை  அரசியல் நோக்கங்களின் பின்னணியில் செயற்படுவதாக தொடராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்றுள்ள முக்கிய கலந்துரையாடலில்  ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன இந்த கருத்தை கடும் அதிருப்தி தொணியில் வெளியிட்டுள்ளார்.


கடும் முடிவுகள் எடுக்க பின் நிற்கப் போவதில்லை கடும் முடிவுகள் எடுக்க பின் நிற்கப் போவதில்லை Reviewed by Madawala News on 10/12/2016 07:29:00 PM Rating: 5