நாங்கள் ஒன்றரை வருடங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை..


இவ்வரசு ஒன்றரை வருடங்களாக மேற்கொண்டு வரும் விசாரணைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் இவ்விசாரணைக்கு உள்ளனவர்கள் விலங்கிட்டு கொள்ள தயாரக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.


கொலொன்னாவை பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொது வைபவங்களுக்காக உபயோகிக்கக் கூடிய பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.

இன்னமும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டகளவுகள்,மோசடிகள், கொலை மற்றும் வன்முறைகள் பற்றிய விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் எங்களது இலங்கை மக்களுக்கு அவசரப்பட்டு, எங்கே ஒன்றும் நடைபெறவில்லையே? ஒருவரும் கைது செய்யப்படவில்லையே? என கேட்கிறார்கள். 

அண்மையில் சமூக வலைதளங்களில் இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் இருவரை தோண்டி எடுத்துள்ளதாக செய்திகள் வலம் வந்தன. தாஜூடீன் மற்றும் லசந்த ஆகிய இருவரும் தான் தோண்டி எடுக்கப்பட்டவர்கள். 

அவர்களை பற்றி நடைபெற்ற விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டிருந்ததால் அவர்களது பிணங்களை தோண்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இன்னமும் அடியிலிருந்து நுனி வரை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. 

இந்நடவடிக்கைகள் சட்ட வரையறைக்குட்பட்டதாக மேற்கொள்ளப்பட்டு  முடிவடையும் தருவாயில் உள்ளன.நாங்கள் ஒன்றரை வருடங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை என இக் கூக்குரலிடுபவர்களுக்கு கூற வேண்டியுள்ளது. இம்முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை வந்தடைந்துள்ளது.

கறுப்பு கோட் அணிந்த வழக்கறிஞருடன் குற்றமிழைத்தவர்கள் சிறை செல்ல நேரிடும். அவர்கள் சிறையிலிடப்படும் காலம் வரும்போது நாட்டு மக்களுக்கு சுபீட்சமான பொருளாதார நிலை தோன்றும் வாய்ப்புக்கள் உள்ளன.  

இவ்வரசு சட்டத்தை நியாயாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. யாராயிருப்பினும் சட்ட நடவடிக்கைகளில் கையடிக்க முடியாது. ஆதலால், அனைத்து விடயங்களுக்கும் நியாயமான தீர்வு கிட்டும் என நாம் நம்புகிறோம்.
 
நாங்கள் ஒன்றரை வருடங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.. நாங்கள் ஒன்றரை வருடங்களாக வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.. Reviewed by Madawala News on 10/06/2016 10:15:00 AM Rating: 5