நல்லட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு பெரும் தலைகுனிவு !


மத்திய வங்கி முறி கோப் அறிக்கையில் திருத்தம் செய்வதற்க்கு ஐக்கிய தேசிய கட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் நல்லட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு  தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி குறிப்பிட்டார்.


கோப் குழு அறிக்கை ஒன்றை நிறைவு செய்துள்ள நிலையில் அந்த கடைசி அறிக்கையில் திருத்தம் கொண்டுவர நல்லாட்சி மலரவேண்டும் என கோசமிட்ட ஹர்ஷ சில்வா போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளது மிகவும் வேதனையான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவில் தங்களது பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நோக்கிலே பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களை ராஜினாமா செய்யவைத்துவிட்டு  அந்த இடத்துக்கு சுஜீவ சேனசிங்கவை நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நல்லட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு பெரும் தலைகுனிவு ! நல்லட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு  பெரும் தலைகுனிவு ! Reviewed by Madawala News on 10/25/2016 03:19:00 PM Rating: 5