Accaddemy

புல்லட் புரூப் கார் : குமார் வெல்கம வீட்டில் சோதனை...

 


பொலிஸ் விசேட விசாரனை பிரிவினர் முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் வீட்டை இன்று சோதனையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் இரண்டு குண்டு துளைக்காத வாகனங்கள் தொடர்பிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த தேடுதல் வேட்டையில் 50 க்கும் மேற்பட்ட பொலிஸார் கலந்துகொண்டுள்ள அதேவேளை பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னர் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவரின் வீட்டு வளாகத்திலிருந்து எந்த வாகனங்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



புல்லட் புரூப் கார் : குமார் வெல்கம வீட்டில் சோதனை... புல்லட் புரூப் கார் : குமார் வெல்கம வீட்டில் சோதனை... Reviewed by Madawala News on 10/18/2016 06:40:00 PM Rating: 5