Accaddemy

விபத்துக்களால் அழிவுறும் மனித வளம்..


ஒவ்வொரு ஆத்தமாவும் மரணிப்பது நிச்சம். அம்மரணம் எந்தக் கோணத்தில்  அப்பிக்கொள்ளும் என்பதை யாரும் அறியார்;. வாழ்வியலின் இன்பத்துக்காக எதிர்கொள்ளும் போரட்டங்களுக்கு   எதிர்நீச்சலடித்து வாழ்க்கை வண்டியை ஓட்டிச் செல்லும் ஒவ்வொருவரும்  அவர்களது இறுதி மூச்சு நல்ல சகுணத்தில் முடிய வேண்டும்; என்கின்ற அவாவைக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறான அவாவோடு வாழும்போது, மரணமானது எதிர்பார்க்காத விதத்தில் கோரமாக சிலரை வந்தடைகிறது. சமகாலத்தில் கொலையென்றும், தற்கொலையென்றும், விபத்துக்கள் என்றும் இடம்பெறும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளினால் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன அல்லது பறியெடுக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. பெறுமதிமிக்க மனித வளம் இவ்வாறான காரணங்களினால் குறிப்பாக விபத்துக்களினால் தினமும் பறியெடுக்கப்படுவது தடுக்கப்படுவதும் தவிர்க்கப்படுவதும் அவசியமாகும்.
எதிர்கால கனவுகள் பலவற்றுடன் நிகழ்காலத்தை நகர்த்திச் செல்லும் பாதசாரிகளும,; வாகனங்களில் பயணிப்போரும்,  வாகன சாரதிகளும் என பலதரப்பினர் அன்றாடம் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு ஆளாகி   காயப்படுவதையும், அங்க உறுப்புக்களை இழந்து அங்கவீனமாகுவதையும், மீளப்பெற முடியாத இன்னுயிர்களை இழப்பதையும் காண்கின்றோம்.
 

விபத்துக்களும் விளைவுகளும்

விபத்து என்பது விரும்பத்தகாத, தேவையற்ற, எதிர்பாராத நிகழ்வாகும். வீதி விபத்துக்கள் வீதிகளில் வாகனங்கள் வாகனங்களுடன் போதுவதாலும், வாகனங்கள் மனிதர்களுடன் அல்லது சொத்துக்களுடன் மோதுவதாலும்; ஏற்படுகிறது.

வீதி விபத்துக்களில் அதிகம் தொடர்புபட்டவை துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கில், முச்சக்கரவண்டி, மோட்டார்கார், வான், லொரி பஸ்கள் அவற்றுடன் பாதசாரிகளையும் குறிப்பிடலாம்.

புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையில் வருடமொன்றுக்கு 385,000 குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல், இறப்புக்களும் அமைகின்றன. புள்ளிவிபரத் திணைக்களத்தி;ன் புள்ளி விபரங்களின் படி 2006ஆம் ஆண்டு 117,467 பேரும் 2007ல்; 118,998 பேரும் 2008 ஆம் ஆண்டு 123,814 பேரும் 2009ல் 120,085 பேரும் 2010ல் 128,603 பேரும் 2011 இல் 123,261 பேரும் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர். இலங்கையில் உயிர் இழப்புக்கான காரணங்களில் தற்காலத்தில் அதிகளவில் தாக்கம் செலுத்துவது, தொற்றா நோய்களும்  மற்றும் வீதி விபத்துக்களுமாகும்.

2006 ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அறிக்கையின்;படி, 2006இல் 35,763 விபத்துக்களும் 2007ஆம் ஆண்டில் 31,982 விபத்துச் சம்பவங்களும், 2008ஆம் ஆண்டில் 29,864 விபத்துக்களும் 2009இல் 33,094 விபத்துக்களும்  2010ஆம் ஆண்டு 37,653 விபத்துக்களும் 2011இல் 37,000 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்விபத்துக்களினால் உயிர் இழந்தவர்களின் எண்ணி;க்கையை அவதானிக்கின்றவேளை 2006 ஆண்டில் 2,238 பேரும் 2007ல் 2,402 பேரும் 2008ல் 2,328 பேரும் 2009ல் 2,413 பேரும் 2010ல் 2,721 பேரும் 2011ல் 2500 பேருமாக ஆறாண்டுகளில் மொத்தம்; 14,602 பேர் வீதி விபத்துக்களினால் உயிர் இழந்துள்ளனர். மேலும் கடந்த 2015இல்  வீதி விபத்துக்களினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2,801 காணப்படுகிறது. அது தவிர, ஒவ்வொரு மூன்றரை மணித்தியாளத்திலும் ஒருவர் வீதி விபத்தினால் உயிர் இழக்கின்றார் என்ற தகவல்கள் இந்த வீதி விபத்துக்களிலிருந்து மனித வளம் காவு கொள்ளப்படுவதை தடுப்பதற்கான வினைத்திறன்மிக்க பொறிமுறைகள் அமுல்படுத்தப்படுவது அவசியமென்பதை வலியுறுத்துகிறது.
 
வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களின் விபரங்களை அதானிக்கின்றபோது  இலங்கையின் மனித வளம் ஆபத்தை எதிர்நோக்கி வருவதை எடுத்துக்காட்டுகிறது. வருடந்தோரும் விபத்துக்களினால் 600 சிறார்கள் இறக்கின்றனர், ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் சிறார் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் ஒரு மணித்தியாலயத்துக்கு 32 சிறுவர்கள் என்ற ரீதியிலும்;  நாளொன்றுக்கு 740 சிறுவர்கள் என்ற ரீதியில் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுதாக தகவல்கள் குறிப்பிடுகின்;றன.
 
இலங்கையின் மனித வளத்தின் ஆரோக்கியமற்ற நிலையை விபத்துக்கள் உருவாக்கி வருவதானல் இந்நிலை இலங்கையின் பெருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தினமும் இடம்பெறு விபத்துக்களினால் காயமுறும் சிறார்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் பெறும் தொகைப் பணத்தை செலவு செய்கிறது. அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற சி;றார்களின் சிகிச்சைக்காக 1,100 மில்லியன் ரூபாவை  வருடாந்தம் அரசு செலவிடுவதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.  
 
 
இந்நிலையில், வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்கெடுப்பின்படி, மோட்டர் சைக்கில், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி, மோட்டார்கார், இரு தேவை – வான்,  லொரி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாகனங்களுடன் தொடர்புபட்ட விபத்துச் சம்பவங்களே அதிகம் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆண்டு 10,147 மோட்டார் சைக்கில் விபத்துக்களும், 4,429 லொரியுடன் சம்பந்தப்பட்ட விபத்துக்களும், இரு தேவை வாகனங்களுடன் தொடர்புபட்ட 4,858 விபத்துக்களும் தனியார் பஸ் விபத்துக்கள் 2,877ம் முச்சக்கர வண்டி விபத்துக்கள் 6,871 ம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புள்ளிவிபரங்கள் விபத்துக்களின் விபரங்களைக் குறிப்பிட்டாலும் இப்விபத்துக்களுக்கான காரணங்களில் அதிக பங்காளிகளாக இருப்பவர்கள் சாரதிகளாகும். நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையும,; வீதி ஒழுங்கைப் பேணாமையும், கவனயீனமும்,  மதுபோதையில், அசவரமாக அதிக வேகத்துடன்; வாகனம் செலுத்துவதும் பிரதான காரணமாகவுள்ளன.

அவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையினைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத்தின் சாதக, பாதக நிலையைக் கண்டுகொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வானம் செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப் புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல்;, சாரதிகள்; குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல்;, வானம் செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவை பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச் சமிஞ்சைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச் சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்ததிற்கொள்ளமை, சட்ட நடவடிக்கைகளில் உள்ள வலுக்கள,; பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாகப் பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களாலும் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன.

விழிப்புணர்வும் பொறுப்புணர்வும்

சனத்தொகையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மனித வாழ்வில்  போக்குவரத்து  இன்றியமையாததொன்று. அப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்துகொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ அவற்றையே இன்று ஒவ்வொரு வாகன சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர்.

கடந்த அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் வீதி அபிவிருத்தி முக்கியமானதாகும். பல நீண்ட தூரப் பிரதேசங்களுக்கான வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இவற்றில் . தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதி வேக நெடுஞ்சாலை முக்கியமானதாகும். இதனால் சாதாரண பாதைகளினூடாக பயணிப்பதிலும் பார்க்க நேரச் சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம். இவ்வாறு அவசரத்தின் அவதானமின்மையினால் இவ்வீதிகளினூடாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன. கடந்த வருடம் 500க்கு மேற்பட்ட விபததுக்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால,; இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டர் சைக்கில்கள் இருப்பதைக் காண முடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால் நகர் புறங்களில் எவ்வாறு இருக்கும் என்பதைச்  சுட்டிக்காட்டவேண்டிதில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில். நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப்; பதிவு செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால,; போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்பூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்;டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதுமாத்திரமின்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா? என்பது கேள்விக் குறியாகும்.

வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டும், சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்பூணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை  அதிகரிக்கப்படுவது அவசியமாகவுள்ளது.

ஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல்  நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் கிராமப் புறங்களிலும் நகரப் புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானாவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.

எந்தவொரு குற்றச் செயல் இடம்பெற்றாலும் அல்லது எந்தவொரு விடயம் தொடர்பாகவும் அவ்விடயமோ அல்லது அக்குற்றச் செயலோ இடம்பெறுகின்றபோது அல்லது அவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் பலனை எதிர்பார்க்குமளவில் ஏற்படுத்தாது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் நாட்டினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மனிதவளத்தைப் பாதுகாக்க முடியும்.

அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையளர்களும் மதிப்பளிப்பதோடு அவற்றைத் தவறாது பின்பற்றவும் வேண்டும். வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ்ட, சிரேஷ்ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்;கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.  

பாதுகாப்பான முறையில் வாகனம் செலுத்துதல் நிகழ்ச்சித்தித்திட்டத்தினூடாக சாரதிகள,; உரிமையாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் நடத்துனர்கள் அறிவூட்டப்படல் முக்கியமானது. வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில் அதிகாரிகளினால் அமுல்படுத்தப்படுவதன் ஊடாக அவ்வாறான நிலமைகளில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் முன் வாகனம் ஓட்டுதல் தொடர்பான திறன், ஒழுங்கு முறையான செலுத்தல், வாகனம் செலுத்துவது மற்றும் வீதி ஒழுங்கு முறை தொடர்பான அறிவு. அவற்றுடன் தேராரோக்கியம் என்பன சரியான முறையில் பரீட்சிக்கப்படுதல் அவசியம்.

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான இவ்வாறான பல நடவடிக்கைகள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினாலும் வீதிப்போக்குவரத்துத் பிரிவு பொலிசாரினாலும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால் இந்நடவடிக்கைகளிலுள்ள தவறுகள், வலுக்கல் எவையென ஆராயப்படுவது முக்கியம்.

அதுமாத்திரமின்றி, வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையென்றால் அத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதும் அம்மாற்றங்களினூடான நடவடிக்ககைள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதும் அவசியமென்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பாகும்.

வாகனங்களும் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப வாகனங்களைச் செலுத்துவது தொடர்பாகவும் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பாகவும் வழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் அதிகரிக்க்பபடுவது இன்றியமையாதது.

அவ்வாறு தொடர்ச்சியான அறிவூட்டல் நடவடிக்கைகள் தொடரப்படுவதன் மூலமே வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உரியவர்களினால் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற  ஒவ்வொரு தனிநபரும்  வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி அதற்கேற்ப செயற்பட அக்கறைகொள்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

ஏனெனில், தினமும் இடம்பெறும் விபத்துக்களினால் இலங்கையின் மனித வளம் ஆரோக்கியமற்ற நிலைக்குத்தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதுடன் விபத்துக்களினால் காயமுறுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பெறும் தொகைப் பணம் வருடாந்தம் செலவிடப்படுகிறது.

எனவே போக்குவரத்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளும் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படுகின்றபோது விபத்துக்களைத் தவிர்த்து உயிர் இழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் பெறுமதிமிக்க மனித வளத்தைப் பாதுகாக்கப்படுவதோடு பொருளாதார இழப்பையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

 
விபத்துக்களால் அழிவுறும் மனித வளம்.. விபத்துக்களால் அழிவுறும் மனித வளம்.. Reviewed by Madawala News on 10/20/2016 01:14:00 PM Rating: 5