Saturday, October 8, 2016

சமூகம் எங்கே சொல்கிறது ? மேய்ப்பார்களே உங்கள் மேய்ப்புகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்...

Published by Madawala News on Saturday, October 8, 2016  | 


கல்வியற்கூடங்களும் முஸ்லிம் மாணவ,மாணவிகளின் கலாசாரப்போக்கும்
கல்வி கற்பதன் அவசியம் சம்மந்தமாக உலகத்தில் இற்றை வரை தோற்றம் பெற்ற எல்லா வேதாந்தங்களும் சித்தாந்தங்களும் கூறத்தவறியதில்லை.

அதிலும் குறிப்பாக மனிதனின் முழு வாழ்க்கைக்குமே  நல்வழிகாட்ட முனையும் மதங்களில் தனது வேதவாக்கின் தொடக்கத்தையே அறிதலிலும் அதனூடான புரிதலிலும் மையப்படுத்தியுள்ள மதம் என்றால் அது இஸ்லாமிய நெறிக்கோட்பாடு ஒன்றே ஆகும். ஆக இஸ்லாம் மார்க்கத்திலும் அதனையே வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்றும் முஸ்லிம் சமூகத்திலும் பால் வேறுபாடு இன்றி கற்றலின்பால் நாட்டம் கொள்ளவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவைத் தேடிப் படிப்பது முஸ்லிமான ஆண்,பெண் இருபாலார் மீதும் கட்டாய கடமையாகும் எனும் நபி வாக்கில் இருந்து விளங்கிக் கொள்ளமுடிகிறது.
 
​எவ்வாறு இஸ்லாமிய கல்விசார் சிந்தனைகளில் பாலின வேறுபாடு களையப்பட்டு சகலருக்கும் கல்வி அவசியம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாத அளவில் கற்றலின் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய ஆண்,பெண் கலப்பு,கற்பு நெறிமுறைகள் பேணப்படவேண்டியதன் அவசியம் பார்க்கப்படுகிறது.

எனவே அறிவை அடைய பயணப்படும் போதான வரையறைக்கப்பாற்பட்ட ஆண்,பெண் சகவாசங்கள்,கற்பு நெறிபிசகுகள் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. எனினும் இவையனைத்தும் எமது இன்றைய முஸ்லிம் மாணவ,மாணவியரது கல்வி கற்றற் பொறிமுறைக்குள் பிரதிபலிக்கப்படுகின்றதா?என்றால் சந்தேகம் ஏதும் இன்றி  இல்லை என்றே கூறிவிட முடியும். ஏனெனில் இன்று எமது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வியற்கல்லூரிகள், பிராந்திய ரீதியில் நடாத்தப்படும் தொழிநுட்ப, உயர் தொழிநுட்ப கல்லூரிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் எமது மாணவ,மாணவிகளின் அநாவசிய செயற்பாடுகளே இதற்கான ஒரே காரணமாகும்.
 
​ஒரு சமுகத்தினுடைய நிலைபேறான இருப்பையும்,அச்சமுகத்தினுடைய கலாசார,பண்பாட்டு தனித்துவங்களையும் உறுதிப்படுத்துவது அச்சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள கல்விமான்களும்,சமூக சிந்தனையாளர்களும் தான். இந்த கல்விமான்களின் உருவாக்கத்தில் பல்கலைக்கழகங்களது பங்கு உண்மையில் தவிர்க்கப்பட முடியாதது. ஆக நாளைய சமூகத்தின் நிர்வாகிகள் பலர் இன்று பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமாகும். எனவே சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவரது கலாசார சீரழிவு நாளைய சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு நிச்சயமாக பங்கம் விளைவிப்பதாய் அமையும். ஆகவே இன்றே களைபிடுங்கப்பட வேண்டிய பருவநிலை காலவோட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
 
எமது நாட்டில் உள்ள 16 அரச பல்கலைக்கழகங்களிலும் எமது மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.இவற்றுள் முஸ்லிம் சமூகத்தினுடைய சொத்து என்று எம்மவர்களால் மார்பு தட்டி இறுமாப்புடன் பேசப்படும் பல்கலைக்கழகமும் உள்ளடங்குகிறது.

ஆனால் இன்று உண்மையிலே இந்த பல்கலைக்கழகத்தினுள் அரங்கேற்றப்டும் அநாச்சாரங்களை சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளது.எமது முஸ்லிம் மாணவ,மாணவிகளது நெறிதவறிய நடவடிக்கைகளை பார்க்கின்ற போது இத்தருணத்திலும் எமது சமூகம் விழிப்படையவில்லை எனின் அதள பாதாளம் அடைவது திண்ணம் என்பது புலனாகின்றது. 

இப்பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னதாகவே சகோதர மொழி மாணவர்களது பிரவேசம் ஆரம்பமானது.ஆனால் இன்று அவர்களது போக்கின் நிலைமையோ ஏனைய நீண்ட காலமாக பெரும்பான்மை சமூகத்தவர் அதிகம் காணப்படும் பல்கலைக்கழகங்களையே விஞ்சுமளவிற்கு வந்துவிட்டது.

இங்கு மிகுந்த கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயம்  யாதெனில் அம்மாணவர்களோடு சேர்ந்து எமது முஸ்லிம் மாணவிகளது காமக்களியாட்டங்கள் கண்மூடித்தனமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

எமது சகோதரி ஒருவர் சிங்கள மாணவர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த போது வளாகத்தினுள் வைத்து பிடிக்கப்பட்டது இங்கு கல்வி கற்கும் எந்தவொரு மாணவரும் அறியாத விடயம் அல்ல.மேலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியற் பீட சிங்கள மாணவர்களுடனான எமது ஒரு சில முஸ்லிம் மாணவிகளது அத்துமீறிய அநாகரிக உறவுகளும் அறியக்கிடைத்துள்ளது.

​​மேலும் குறிப்பாக எமது மாணவிகள் விடுமுறை தினங்களில் சிங்கள மாணவர்களுடன் முஸ்லிம்களின் செறிவு குறைந்த இடங்களில் உள்ள விடுதிகளில் உல்லாசம் அனுபவிப்பதும்,வீட்டிற்கு சென்று வரும் வழிகளில் தனியாக சிங்கள மாணவர்களுடன் மோட்டார் சைக்கிளிலும், பஸ்ஸிலும் பயணிப்பதும் காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும் குறிப்பிட்ட இப்பல்கலைக்கழக மாணவ,மாணவிகளது கற்பொழுக்கம் வழிதவறிச் செல்வதென்பது இம்மியளவேனும் அனுமதிக்க முடியாதது. ஏனெனில் குறிப்பிட்ட சில மாணவிகளது செயற்பாடுகளால் ஒட்டு மொத்த முஸ்லிம் மாணவ சமூகமும் இலக்கு வைக்கப்பட்டு சாடப்படுவது என்பது அவ்வளவு ஆரோக்கியமானதொன்றல்ல. மேலும் தற்போது கூட முஸ்லிம் மாணவிகள் பலர் சிங்கள ஆண் மாணவர்களுடன் காதல் வயப்பட்டு மார்க்கம் அனுமதிக்காத அந்நியோன்யமான தகாதஉறவுகளை கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் குறிப்பிட்ட இந்த பல்கலைக்கழகம் மாத்திரம் அன்றி ஏனைய பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளது நடவடிக்கைகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவிகள் பொதுப்போக்குவரத்து மார்க்கங்களை பயன்படுத்தும் போது நடந்து கொள்ளும் முறையானது அந்நிய சமூகத்தவர்களே முகம் சுளிக்கும் அளவுக்கு படு கேவலமானதாகவுள்ளது. அதுபோக முஸ்லிம் பெண் மாணவிகள் தனியாகவோ அல்லது குழுமமாகவோ எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலையத்தளங்களில் பதிவேற்றி எமது முஸ்லிம் சமுகத்தின் கலாசார வரம்புகளை தகர்த்தெறிந்து விடக்கூடியதொரு நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான சீரழிவுகள் நாளுக்குநாள் ஒன்று இரண்டாகி,இரண்டு நான்காகிக் கூடிக்கொண்டு செல்கிறதே தவிர குறிப்பிடத்தக்க அளவு மாற்றமேதும் அவதானிக்கப்படவில்லை.
 
எது எவ்வாறாக இருப்பினும் இவ்வாறான பாலியல் ஷேட்டைகளும், காமக்களியாட்டங்களும் பகிரங்கமாக பஸ்களிலும், பல்கலைகழக சாலையோரங்களிலும் எமது மாணவிகளினால் அரங்கேற்றப்படுகின்ற போதிலும் எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டும் காணாமல் அசமந்தத்தனமாக நடந்து கொள்வது மனவேதனைக்குரிய விடயமாகும். இதுபோன்ற மாரக்;கம் அனுமதிக்காத முஸ்லிம் சமூகத்தின் மானத்தை விலை பேசும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் எமது சமூகம் ஊழிக்காலத்தின் விளிம்புப்பகுதிக்கே செல்லும் என்பதில் இரண்டாம் வாதமேதும் இருக்காது.
 
இவற்றை முற்றிலுமாக இல்லாதொழிக்க நாட்டில்  உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ்கள் துணிவதோடு, மார்க்கத்தையும், ஷரீஆ சார்ந்த விடயங்களையும் நடைமுறைப்படுத்தும் விடயத்தில் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை என்பதையும் உணர தலைப்படவேண்டும்.மேலும் முஸ்லிம் மஜ்லிஸ்கள் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்,தேவைப்படும் பட்சத்தில் முறைகேடாக நடக்கும் மாணவ,மாணவிகள் சம்மந்தமாக அவர்களது பள்ளிவாசல் மஹல்லாக்களுக்கும் எத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலத்தைப் போல் அல்லாது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் (யுருஆளுயு) இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைப்புடன் செயற்பட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்விப்பிரிவு இந்த சமூக சீர்கேட்டை தடுத்து நிறுத்த தம்மாலான எல்லா நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

மேலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் ஏனைய இஸ்லாமிய சமூக மேம்பாட்டு நிறுவனங்களும்  இந்த விடயத்தில் கரிசனை கொண்டு பல்கலைக்கழக மாணவ,மாணவிகளுக்கு மார்க்க வழிகாட்டற் கருத்தருங்குகளை அடிக்கடி ஏற்பாடு செய்து அவர்களை தவறான வழியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். 

இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்கள் உங்கள் மேய்ப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீரகள் எனும் நபிவாக்கை நெஞ்சில் நிறுத்தி,அல்லாஹ்வைப் பயந்து தங்களால் முடியுமான காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றோம்.
 
​​​​​​​​றிப்ஸாத் ரிஸ்வி
 


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top