Ad Space avaiable

மத்திய வங்கி முறி மோசடி ; சட்ட நடவடிக்கை எடுக்க கோப் குழு பரிந்துரை. ...


மத்திய வங்கி பிணை முறிகள் மோசடி குறித்து அர்ஜூன் எலோசியஸ் மற்றும் பர்பேசுவல் ட்ரேசரிஸ் லிமிட்டடின் பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, கோப் குழு பரிந்துரைத்துள்ளது. 

இன்று கூடிய கோப் குழுவின் கூட்டத்தில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்னதாக கோப் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மத்திய வாங்கி முறிகள் விற்பனை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை மாற்றுமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்டாயப்படுத்திய காரணத்தினால் கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கோப் குழு கூட்டத்திலிருந்து வெளியேறிந்த நிலையில் அஜித் பீ பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கோப் குழு அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மத்திய வங்கி முறி மோசடி ; சட்ட நடவடிக்கை எடுக்க கோப் குழு பரிந்துரை. ... மத்திய வங்கி முறி மோசடி ; சட்ட நடவடிக்கை எடுக்க கோப் குழு பரிந்துரை. ... Reviewed by Madawala News on 10/24/2016 11:34:00 PM Rating: 5