Accaddemy

விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி.



கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே உயிரிழந்தனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி. விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி. Reviewed by Madawala News on 10/21/2016 11:22:00 AM Rating: 5