Accaddemy

மஹிந்த தலைமையிலேயே அடுத்த அரசாங்கம் !


புதிய கட்சி உருவாக்கப்படுமா இல்லையா என்று முடிவெடுப்பது மக்களின் தீர்மானப்படியே என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் இன்று இடம்பெறுகின்ற பேரணி புதிய கட்சி உருவாக்குவதற்காகவா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு கூறினார். 

எமக்கு கட்சி உருவாக்குமாறு கூறுவது மக்கள் என்றும், எனினும் அதை இப்போதே செய்வதில்லை என்றும் தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் உடனடியாக கட்சி ஒன்றை ஆரம்பித்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அமைப்போம் என்று அவர் கூறினார். 

ரணதுங்க குடும்பத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக கேள்வி எழுப்பப்பட்ட போது, பண்டாரநாயக்க குடும்பமும் அவ்வாறு தான் என்று பதிலளித்த அவர், ஐந்து வரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறினார். 
மஹிந்த தலைமையிலேயே அடுத்த அரசாங்கம் ! மஹிந்த தலைமையிலேயே அடுத்த அரசாங்கம் ! Reviewed by Madawala News on 10/08/2016 02:49:00 PM Rating: 5