இரத்தினபுரி கூட்டத்துக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை !


இரத்தினபுரிக் கூட்டத்துக்கு சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த தேவையற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஒழுக்காற்று விசாரணை அவசியமற்றது. எதிர்க் கட்சியில் இருக்கும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாதாரணமான ஒன்று. ஒழுக்காற்று விசாரணை எடுப்பதனால், கட்சி இரண்டாகும். கட்சியை இரண்டாக்க நினைப்பவர்களுக்கு நியாயம் கற்பிக்க நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

எது எவ்வாறிருந்தாலும், கூட்டு எதிர்க் கட்சியின் நிகழ்வுகளில் மக்கள் பங்குபற்றல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதைக் காண முடிகின்றது எனவும் அமைச்சர் மஹிந்த மேலும் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி கூட்டத்துக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை ! இரத்தினபுரி கூட்டத்துக்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை ! Reviewed by Madawala News on 10/09/2016 07:55:00 AM Rating: 5