நல்லாட்சி அரசுக்கு புதிய தலையிடி ! அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ...


கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் அமைசார்கள் இடயே கடும் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பொன்சேகா விஜேதாச ராஜபக்‌ஷ தொடர்ந்து முறுகளில் ஈடுபட்டுவந்த நிலையில் அவர்களுக்கு இடையேயான முருகல் தற்போது சற்று ஒய்ந்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர்கள் அர்ஜுன தயாசிரி குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார ஆகியோருக்கு இடையேயான முறுகல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமைச்சர்கள் அர்ஜுன தயாசிரி குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார ஆகியோர் ஊடகங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்ளும் அளவு நிலமை மோசமடைந்துள்ளது.

மேலும் நேற்று முன்தினம் அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுக்கும் முன்னாள் அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவின் மகன் வென்னப்புவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பிரதி அமைச்சர் நிரோஷன் பெரேராவுக்கும் இடையிலும் முருகல் ஏற்பட்டுள்ளது.

நிகழ்வு இந்திக்கு அழைப்புவிடுக்கப்படாமை தொடர்பில் இருவருக்கும் இடையே கடும் கருத்து முரன்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பிரதி ராஜாங்க அமைச்சர்கள் பலருக்கு இடயேயும் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளது.



நல்லாட்சி அரசுக்கு புதிய தலையிடி ! அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ... நல்லாட்சி அரசுக்கு புதிய தலையிடி ! அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு ... Reviewed by Madawala News on 10/12/2016 07:48:00 AM Rating: 5