மீத்தொட்டுமுல்லை குப்பைக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு ! முட்டுக்கட்டையாக மெகா பொலிஸ் அமைச்சு...


கொழும்பில் அப்புறப்படுத்தப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை பிரித்தானியாவுக்கு எடுத்து செல்ல அனுமதி கேரப்பட்ட்டுள்ள போதும் அதற்கான அனுமதி மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் இதுவரை வழங்கப்படவில்லை என மேல் மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் இடையூராக மாறியுள்ள மீத்தொட்டுமுல்ல குப்பை கழிவுகள் 19 ஏக்டேயார் நிலப்பரப்பில் பரவிக்கிடக்கின்ற நிலையில் அதனை மீள் சுழற்ச்சி செய்யும் இயந்திரத்தை பொறுத்த 60 பேர்ச் காணியை குறித்த நிறுவனம் கோரியுள்ளது.

நான்கு வருடங்களில் குறித்த பிரதேசத்தில் காணப்படும் 4 லட்சம் டொன் குப்பைகழிவுகளை அப்புறப்படுத்தி தறுவதுடன் இதனை மீள் சுழற்சி செய்வதினூடாக பெற்றுக்கொள்ளும் நிகர லாபத்தில் 50 வீதத்தை அரசுக்கு செலுத்துவதாக இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள பிரித்தானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இதற்காக அனுமதியை வழங்கவில்லை எனவும் மேல் மாகாண சபை மூன்று தடவைகள் கடிதம் மூலம் இதனை அறிவித்து அந்த அமைச்சில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றதாக கூட பதில் அளிக்க வில்லை என மேல் மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீத்தொட்டுமுல்லை குப்பைக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு ! முட்டுக்கட்டையாக மெகா பொலிஸ் அமைச்சு... மீத்தொட்டுமுல்லை குப்பைக்கு இங்கிலாந்து செல்ல வாய்ப்பு ! முட்டுக்கட்டையாக மெகா பொலிஸ் அமைச்சு... Reviewed by Madawala News on 10/07/2016 08:31:00 AM Rating: 5