நாட்டின் உயர் கதிரையில் இருப்பவரின் புதல்வர் இரவு களியாட்ட விடுதி மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் !


நாட்டின் உயர் கதிரையில் இருப்பவரின் புதல்வர் உள்ளிட்ட குழுவினர் இரவு களியாட்ட விடுதி ஒன்றில் மோதலில் ஈடுபட்டு குறித்த இரவு விடுதி மற்றும் அங்குள்ள ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று நள்ளிரவு 2 மணியளவில் கொழும்பில் உள்ள கிளிக்ஸ் என்ற பிரபல இரவு களியாட்ட விடுதிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ள புதல்வர் அங்கு பலவந்தமாக உட்பிரவேசிக்க முற்பட்டதாகவும் அதன் போது ஏற்பட்ட வாய் தர்கத்தில் பிரபு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த சிலர் அங்குள்ள உழியர்களை தாக்கியுள்ளதுடன் விடுதி கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்துள்ள விடுதி பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் தேசிய வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகங்களில் தற்போது இது தொடர்பில் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ள இந்த தகவல் சீ சீ டீ வீ ஆதாரங்களுடன் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.




 

 


 
நாட்டின் உயர் கதிரையில் இருப்பவரின் புதல்வர் இரவு களியாட்ட விடுதி மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் ! நாட்டின் உயர் கதிரையில் இருப்பவரின் புதல்வர் இரவு களியாட்ட விடுதி மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் ! Reviewed by Madawala News on 10/08/2016 12:18:00 PM Rating: 5