Free Space

ஆமை வேகத்தில் நகரும் ஊழல் மோசடி விசாரனைகள் ...


கடந்த வருடம்  ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் ஒக்டோபர் வரை லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவில்  225 முறைப்பாட்டுகளை தாங்கள் செய்துள்ள போதும் அதில் 34 முறைப்பாடுகளுக்கான  மாத்திரமே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய முறைப்பாடுகளுக்கான விசாரனைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாமல் அப்படியே  கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் ஊழல் எதிர்ப்பு முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த 225 முறைப்பாடுகளில் மிக் விமான கொள்வனவு மோசடி , எவன் கார்ட் மோசடி  , மத்திய வங்கி முறி மோசடி உள்ளிட்ட பாரிய மோசடி முறைப்பாடுகளும் அடங்குவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூட்டு அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளை விசாரனைகளை முன்னெடுப்பதில் கடும் அரசியல் அழுத்தங்கள் வரும் நிலையில் விசாரனைகளில் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழல் மோசடி விசாரனை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருகஷி ராஜினாமா செய்த பின்னர் அந்த ஆணைக்குழு வில் கடமையாற்றும் சக பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
ஆமை வேகத்தில் நகரும் ஊழல் மோசடி விசாரனைகள் ... ஆமை வேகத்தில் நகரும் ஊழல் மோசடி விசாரனைகள் ... Reviewed by Madawala News on 10/24/2016 03:44:00 PM Rating: 5