Free Space

தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள ஷாகிர் நாயக் இந்திய வரவில்லை ..


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

பிரபல இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் தந்தையான டாக்டர் அப்துல் கரிம் நாயக் இன்று மும்பையில் மரணம் அடைந்த நிலையில் அவரது பூதவுடல் 
நல்லடக்கம் மும்பையில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் பிறந்து மனநல சிகிச்சை நிபுணராக விளங்கிய அப்துல் கரிம் நாயக், முன்னர் கல்வியாளராக சமூகச் சேவையில் ஈடுபட்டார். மும்பை மனநல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தந்தையின் இறுதி யாத்திரையில் ஜாகிர் நாயக் பங்கேற்கவில்லை என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு திரும்பி வராமல் வெளிநாட்டில் தங்கியுள்ளார்.

வங்கேச தேச தீவிரவாத தாக்குதலை ஸாகிர் நாயக் அவர்களை தொடர்புபடுத்தி இந்தியா அரசு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள ஷாகிர் நாயக் இந்திய வரவில்லை .. தந்தையின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள ஷாகிர் நாயக் இந்திய வரவில்லை .. Reviewed by Madawala News on 10/30/2016 06:15:00 PM Rating: 5