tg

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவது உலக அமைதிக்கு ஆபத்து ..


 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வதேச நாடுகளின் பார்வையில் அது மிக ஆபத்தானதாக கருதப்படும் என ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜெயித் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், டிரம்ப்பின் நடவடிக்கைகள் மிகவும் அதிருப்தி அடையவும், வேதனை அடையவும் வைத்து விட்டது. குறிப்பாக அவரது ஆபாச பேச்சுக்கள், அடக்குதல் பேச்சுக்கள் ஆகியன மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் , எவ்வித சந்தேகமும் இல்லாமல் உலக நாடுகளின் பார்வையில் அது அபாயகரமானதாக பார்க்கப்படும்.

நான் எந்த ஒரு நாட்டின் அரசியல் பிரசாரத்திலும் ஈடுபட மாட்டேன். தேர்தல் குறித்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவர்களுக்கு எதிரான பேச்சுக்கள் அடிப்படையிலும் இதை கூறுகிறேன். பதவிக்கு வருவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகள் மனித உரிமைகளை பாதிப்பதாகும். மனித உரிமைகள் கழகத்தில் இருப்பதால் இதை சொல்ல வேண்டியது எனது கடமையும் கூட என்றார்.
டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவது உலக அமைதிக்கு ஆபத்து .. டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவது  உலக அமைதிக்கு ஆபத்து .. Reviewed by Madawala News on 10/12/2016 09:43:00 PM Rating: 5